பெர்லினில் வாடகை வீட்டில் வசிப்போருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

வீட்டு வாடகை உயர்வால் அவதியுறுவோருக்கு உதவும் வகையில், புதிய சட்டம் ஒன்று பெர்லினில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வீட்டு உரிமையாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு வீட்டு வாடகையில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது.

அத்துடன், சதுர மீற்றர் ஒன்றிற்கு 9.80 யூரோக்களுக்கு அதிகமாக வாடகை வாங்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தொகையைவிட அதிகம் வாடகை வாங்கும் வீட்டு உரிமையாளர் மீது வழக்கும் தொடரலாம்.

இந்த சட்டம் மாகாண நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டியுள்ளது என்றாலும், 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைமுறைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்