700 அடி குழியில் சிக்கி உயிருக்கு போராடும் 38 பேர்.. ஜேர்மனி சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் உள்ள சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Teutschenthal நகராட்சியில் உள்ள சுரங்கத்திலே 9 மணிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் தீயணைப்பு குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெடி விபத்தால் நிலத்தடியில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சுரங்க பணியில் சுமார் 100 பேர் ஈடுபட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வெடி விபத்தின் போது சுரங்கத்திற்கு அடியில் 40 பேர் இருந்தாகவும். அவர்கள் இருப்பிடம் பாதுகாப்பாக இருப்பதாக சுரங்கத்தை இயக்கி வரும் MDR SACHSEN-ANHALT நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், மீட்கப்பட்ட இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெடி விபத்தில் தப்பி 700 அடி ஆழத்தில் பத்திரமாக இருக்கும் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், வெடி விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்