சென்னையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டு ஜேர்மனிக்கு அனுப்பப்பட்ட இளைஞர்! நடந்தது இது தான்

Report Print Raju Raju in ஜேர்மனி

ஜேர்மனியை சேர்ந்த இளைஞர் குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக போராடியதால் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற அவருக்கு உத்தரவு பிறக்கப்பட்டதையடுத்து அது குறித்து அவர் பேசியுள்ளார்.

இந்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், அசாம், பீகார், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முதல்வர்கள், பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டிசம்பர் 19ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்ற சென்னை ஐஐடியில் பயின்று வரும் ஜேர்மனியை சேர்ந்த ஜேக்கப் என்ற மாணவர் மத்திய அரசை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து நேற்று விமான நிலையத்துக்கு அவர் வந்தார்.

இது தொடர்பில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்கு பேட்டியளித்த ஜேக்கப், ஆமாம் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதால் என்னை நாட்டை விட்டு வெளியேற சொன்னது உண்மை தான்.

இது தொடர்பான விடயங்கள் அனைத்து வாய்வழியாகவே பேசப்பட்டன என கூறினார்.

குடியுரிமை அதிகாரிகள் கூறுகையில், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அரசியல் செயல்பாடு அல்லது அது தொடர்பிலான போராட்டங்களில் கலந்து கொள்வது விசா விதிமுறைகளை மீறும் செயலாகும்.

இத்தகைய மீறல் நாடுகடத்தப்படுவதில் போய் நிற்கிறது, இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்