கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஜேர்மன் ரயில்வே: கொரோனாவின் நடுவில் செயல்பட நடவடிக்கைகள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் கொரோனாவால் ரயில்வே துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவை எதிர்கொண்டு மீண்டும் இயங்க பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்துவருகிறது.

ஏப்ரலில் 85 சதவிகிதம் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் வருவாயும் கணிசமாக குறைந்துவிட்டது.

ஆகவே, கொரோனாவை சமாளித்து ரயில்களை இயக்குவதற்காக சுத்தம் செய்யும் பணியாளர்களை இரட்டிப்பாக்கவுள்ளது ரயில்வே துறை.

ரயிலில் அதிகம் தொடப்படும் இடங்களாகிய கதவுகளின் கைப்பிடிகள், ரயிலுக்குள் பயணிகள் பிடித்துக்கொண்டு நிற்கும் கைப்பிடிகள் ஆகியவற்றை தொடர்ந்து கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது இந்த சுகாதாரப் பணியாளர்களின் வேலையாகும்.

அதேபோல் ரயில் நிலையங்களில் மாஸ்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.

அத்துடன் தற்போது கட்டணக்கழிப்பிடங்களாக உள்ள கழிப்பிடங்கள் பல இலவச கழிப்பிடங்களாக மாற்றப்பட உள்ளன.

ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் மற்றும் நொறுக்குத்தீனி இயந்திரங்களும் அடிக்கடி சுத்தம் செய்யப்படுவதுடன், நீண்ட தூர ரயில்கள் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநீக்கம் செய்யப்பட்டு இயக்கப்படுகின்றன.

தாங்கள் சுத்தம் சுகாதாரத்தை கடைப்பிடிக்கும் நிலையில், பயணிகளும் சுகாதாரத்தை கைக்கொள்ளுமாறு ரயில்வே துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்