ஜேர்மனியில் அற்புதம்! தேவாலயத்திற்குள் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள்.. குவியும் பாராட்டுக்கள்

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த தேவாலயத்தில் இடமளித்து உதவிய சம்பவம் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் உள்ள தேவாலயமே இவ்வாறு உதவியுள்ளது.. இச்சம்பவம் ஒற்றுமையின் அற்புதமான அடையாளம் என்று பாராட்டப்பட்டது.

வழிபாட்டுத் தலங்கள் இந்த மாத தொடக்கத்தில் ஜேர்மனியில் மீண்டும் திறக்கப்பட்டன, ஆனால் வழிபாட்டாளர்கள் ஒருவருக்கொருவர் 1.5 மீட்டர் (ஐந்து அடி) குறைந்தபட்ச தூரத்தை பராமரிக்க வேண்டும்.

பொர்லின் நியூகோல்ன் மாவட்டத்தில் உள்ள தார் அஸ்ஸலாம் மசூதியில் வெள்ளிக்கிழமைகளில் தொழுகையில் ஈடுபட நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் வருவார்கள்.

ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த வழங்கப்பட்ட வழிகாட்டுதலின் கீழ் ஒரே நேரத்தில் 50 பேருக்கு மட்டுமே மசூதிக்குள் தொழுகை நடத்த முடியும்.

இந்நிலையில் அருகிலுள்ள மார்தா லூத்தரன் தேவாலயம் அரபு மற்றும் ஜேர்மன் மொழிகளில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு உதவ முன்வந்துள்ளது. இதனையடுத்து, முஸ்லிம்கள் தேவாலயத்திற்குள் தொழுகையில் ஈடுபட்டனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்