ஜேர்மனியை உலுக்கிய மிக மோசமான சம்பவம்: அடையாளம் காணப்பட்ட 3 சிறார்கள்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் Münster பகுதியில் சிறார்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய விவகாரத்தில் இளைஞர்கள் உள்ளிட்ட 11 நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட 3 சிறார்களையும் பொலிசார் அடையாளம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூவரும் முறையே 5, 10 மற்றும் 12 வயதுடையவர்கள் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளிக்கு 27 வயது எனவும் அவர் Münster பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவருடன் தொடர்புடைய மேலும் 6 நபர்களுக்கு கைதாணை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் திரட்டப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் எனவும், அவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Münster பகுதியில் ஒரு தனிப்பட்ட பகுதியில் வைத்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களில் நால்வர், பாதிக்கப்பட்ட 5 மற்றும் 10 வயது கொண்ட சிறுவர்கள் இருவருடன் பல மணி நேரம் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சிறார்கள் இருவரும், குற்றவாளிகளாக கருதப்படும் இருவரின் பிள்ளைகள் எனவும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும், இந்த துஸ்பிரயோக நடவடிக்கைகள் அனைத்தும் கெமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், ஆனால் தற்போது அவை அழிக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி குளிரூட்டப்பட்ட, அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு பதுங்கு அறையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறையில் வைத்தே அந்த 27 வயது இளைஞர் பாலியல் துஸ்பிரயோக வீடியோ பதிவுகளை தயாரித்துள்ளார் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அந்த ரகசிய அறையில் இருந்து மீட்கப்பட்ட பாலியல் தொடர்பான வீடியோக்கள் மட்டும் 500 டெர்ராபைட்டுகள் என பொலிஸ் தரப்பு வெளிப்படுத்தியுள்ளது.

மட்டுமின்றி பெரும்பாலான தரவுகளை அந்த இளைஞர் மிகவும் சாமர்த்தியமாக பாதுகாத்து வந்துள்ளதை பொலிசார் சுட்டிக்காட்டினர்.

இதுவரை, அந்த பாதுகாக்கப்பட்ட தரவுகளில் பெரும்பாலானவற்றை பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், நிபுணர்களின் உதவியை நாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்