அமெரிக்கா-ஜேர்மனி உறவில் சிக்கல்! ஒப்புக் கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர்

Report Print Basu in ஜேர்மனி

அமெரிக்காவுடனான ஜேர்மனியின் உறவு ‘சிக்கலானது’ என்று ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் கூறினார்.

ஜேர்மனியில் இருந்து அமெரிக்க வீரர்கள் திட்டமிட்டு திரும்பப் பெறுவது குறித்து மாஸ் வருத்தம் தெரிவித்தார்.

9,500 படைகளை ஜேர்மனியில் இருந்து வெளியேற்றுமாறு அமெரிக்க இராணுவத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்க படைகளின் ஒரு பகுதியை திரும்பப் பெற்றால், நாங்கள் இதை கவனத்தில் கொள்கிறோம்.

பல தசாப்தங்களாக வளர்ந்த அமெரிக்க படைகளுடனான ஒத்துழைப்பை நாங்கள் பாராட்டுகிறோம். இது எங்கள் இரு நாடுகளின் நலன்களுக்காகவே உள்ளது என்று மாஸ் கூறினார்.

அமெரிக்காவுடனான ஜேர்மனி உறவில் உள்ள சிக்கல்களை மாஸ் ஒப்புக் கொண்டார்.

அட்லாண்டிக் கடலைக் கடந்த கூட்டணியில் நாங்கள் நெருங்கிய கூட்டாளிகள். ஆனால், இது சிக்கலானது என மாஸ் கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்