அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு அனுமதி மறுப்பு: ஜேர்மன் ஹொட்டல் நிர்வாகம் வெளியிட்ட சுவாரஸ்ய காரணம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பிரபலமான ஹொட்டல் ஒன்று அதிக உடல் எடை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கான சுவாரஸ்ய காரணத்தையும் அந்த ஹொட்டல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஜேர்மனியில் Cuxhaven நகரில் அமைந்துள்ள Sahlenburg என்ற கடற்கரை ஹொட்டல் நிர்வாகமே குறித்த சுவாரஸ்ய முடிவை மேற்கொண்டுள்ளது.

அதாவது 130 கிலோ உடல் எடை கொண்டவர்களுக்கு தற்போதைய சூழலில் தங்களது ஹொட்டலில் அனுமதி மறுக்கப்படுவதாகவும்,

ஹொட்டலில் தற்போதைய உள்கட்டமைப்பு அவர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், தனித்துவமான எங்கள் மரச்சாமான்கள் மிகவும் மெல்லிய குணம் கொண்டவை எனவும், உங்கள் அதிக உடல் எடையை தாங்கிக்கொள்ளும் பக்குவம் அதற்கில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஹொட்டல் உரிமையாளரான Angelika Hargesheimer இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், தனித்துவமான உள்கட்டமைப்பை தாங்கள் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைத்துள்ளதாகவும்,

அது அதிக உடல் எடை கொண்டவர்களால் சேதமடைய தாங்களது நிர்வாகம் விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஹொட்டல் நிர்வாகத்தின் இந்த காரணத்தை பலராலும் எந்றுக்கொள்ள முடியவில்லை என்பது மட்டுமல்ல,

இது பாகுபாட்டை அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளதாக குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்