கடைகள் சூறை, தாக்கப்பட்ட பொலிசார், அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள்: ஜேர்மனியில் கலவரம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியின் ஸ்டட்கர்ட் பகுதியில் போதை மருந்து வேட்டையில் ஈடுபட்ட பொலிசார் மீது கும்பல் ஒன்று கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டதுடன் கடைகளை சூறையாடியுள்ளது.

குறித்த போதை மருந்து வேட்டைச் சம்பவம் கலவரமாக மாறியதால் 19 பொலிசார் காயமடைந்துள்ளனர்.

சுமார் 500 பேர் கொண்ட கும்பல் இந்த கலவரத்தில் ஈடுபட்டுள்ளது. கடைகளை சூறையாடியதுடன், கண்ணில் தென்பட்ட வாகனங்கள் அனைதையும் அடித்து நொறுக்கியுள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய 24 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிசாரால் அந்த கும்பலை கட்டுப்படுத்த முடியாமல் போகவே அது கலவரமாக வெடித்துள்ளது.

central park பகுதியில் 17 வயது சிறுவன் போதை மருந்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலை அடுத்தே பொலிசார் அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

தொடர்ந்து இளைஞர்கள் சிலர் பொலிசாரை மிரட்டியதுடன், தாக்குதலில் ஈடுபட்டு காயப்படுத்தியுள்ளனர்.

பொலிசாருடன் சுமார் 200 பேர் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி போத்தல்கள் கற்களை வீசியும் தாக்கியுள்ளனர்.

திடீரென்று அந்த கும்பலின் எண்ணிக்கை அதிகரிக்கவும், பலர் பொலிஸ் வாகனங்களை குறிவைத்து தாக்கியுள்ளனர். இதில் 12 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி முகமூடி அணிந்த ஒரு கும்பல் கடைகளை சூறையாடியுள்ளது. மொத்தம் 40 கடைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் 9 கடைகளை மொத்தமாக சூறையாடியுள்ளனர்.

இந்த வன்முறை சம்பவங்களை அடுத்து தற்போது கலவரத்தைத் தணிக்க சுமார் 280 ஆயுத பொலிசார் களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும் குழப்பத்தைத் தூண்டியது என்ன என்பது குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஸ்டட்கர்ட் காவல்துறை துணைத் தலைவர் தாமஸ் பெர்கர் தெரிவிக்கையில், தமது 30 ஆண்டுகால அனுபவத்தில் இதுபோன்ற ஒரு வன்முறை சம்பவத்தை இந்த பகுதியில் இதுவரை சந்தித்ததே இல்லை என்றார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்