மேட்லின் வழக்கு: இந்த தொலைபேசி எண் குறித்து அறிந்தவர்கள் பொலிசாரை அணுகவும்... பொலிசாரின் விளம்பரத்திற்கு கிடைத்த நல்ல ரெஸ்பான்ஸ்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரித்தானிய குழந்தை மேட்லின் மாயமான வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் நபர் அழைத்த ஒரு தொலைபேசி எண் வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் நிலையில், அந்த எண் யாருடையது என்பதைக் கண்டுபிடிக்க வித்தியாசமான ஒரு நடவடிக்கையை எடுத்தார்கள் பொலிசார்.

ஜேர்மன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல கிரைம் நிகழ்ச்சி ஒன்றின் முடிவில் அந்த எண்ணை வெளியிட்டு, அது யாருடையது என்பது தெரிந்தால் பொலிசாரை தொடர்புகொள்ளுமாறு தெரிவித்திருந்தார்கள் அவர்கள்.

அந்த நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. எண் வெளியானதுமே, 16 பேர் தங்களுக்கு அந்த எண் குறித்து தெரியும் என பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.

அதில் ஒருவர் அளித்துள்ள தகவல் வழக்குக்கு பெரும் உதவியாக இருக்கும் என பொலிசார் நம்புகிறார்கள்.

போர்ச்சுகல்லுக்கு பிரித்தானிய குடும்பம் ஒன்று சுற்றுலா சென்றபோது தங்கள் மூன்று வயது குழந்தையை தவறவிட்டது.

Christian Bruckner (43) என்பவன் அந்த குழந்தையை கடத்தியிருப்பான் என நம்பப்படும் நிலையில், பொலிசார் அதற்கான ஆதாரங்களை தீவிரமாக தேடி வருவதன் ஒரு படியாகத்தான் இந்த தொலைபேசி எண்ணை வெளியிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்