பொலிசாரை ஏமாற்றி ஆயுதங்களை சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆன நபர்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
282Shares

ஜேர்மன் நகரம் ஒன்றில் பொலிசாரிடமிருந்தே ஆயுதங்களை பறித்துக்கொண்டு காட்டுக்குள் தலைமறைவாகிவிட்டார் ஒருவர்.

Oppenau என்ற இடத்தில், குடிசை ஒன்றிற்குள் ஒருவர் ஆயுதங்களுடன் சந்தேகத்துக்குரிய முறையில் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.

அந்த குடிசைக்குள் 31 வயது நபர் ஒருவர் இருந்துள்ளார். அவரிடம் ஒரு வில், அம்புகள், கத்தி மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் இருந்துள்ளது.

பொலிசாரைக் கண்டதும் கைகளை உயர்த்தியபடி அவர்களுடன் புறப்பட்டுள்ளார் அந்த நபர்.

பொலிசாரும், அவர் தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் அவரை தங்களுடன் வருமாறு அழைக்க, முதலில் அமைதியாக வருவது போல் காட்டிக்கொண்டு, பின்பு பொலிசார் சற்றும் எதிர்பாராத நேரத்தில் துப்பாக்கியை எடுத்து பொலிசாரை மிரட்டியுள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத பொலிசாருக்கு, தங்கள் துப்பாக்கியை எடுக்க சந்தர்ப்பமேகிடைக்காமல் போக, துப்பாக்கியைக் காட்டி அவர்களை மிரட்டி, அவர்களது துப்பாக்கிகளை பறித்துக்கொண்டு, காட்டுக்குள் ஓடி மறைந்துவிட்டார் அவர்.

அவரிடம் ஆயுதங்கள் இருப்பதால், எச்சரிக்கையுடன் ஹெலிகொப்டர் உதவியுடன் அவரை தேடி வருகின்றனர் பொலிசார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்