வீட்டில் ஆள் இல்லை திருட வரலாம், துப்புக்கொடுக்கும் காதலி, திருடும் காதலன்... பிரித்தானிய சிறுமி மாயமான வழக்கில் அவிழும் முடிச்சுகள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரித்தானிய சிறுமி மேட்லின் மெக்கேன் போர்ச்சுகல்லில் மாயமான வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுமி மேட்லின் கடத்தப்படும் முன், கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரான Christian Brueckner (43) யாரோ ஒருவரிடம் மொபைல் போனில் பேசியிருக்கிறார்.

அது Bruecknerஇன் முன்னாள் காதலியான Nicole Fehlinger (43) என கருதப்படுகிறது. தற்போது பவேரியாவில் வாழ்ந்துவரும் அவரைப் பிடித்து விசாரித்தால் மேட்லின் குறித்த உண்மை வெளிவரும் என பொலிசார் கருதுகிறார்கள்.

அதற்கு உறுதியான சில காரணங்கள் கூறப்படுகின்றன. இந்த Nicoleம் Bruecknerஐப் போலவே சில ஆண்டுகள் போர்ச்சுகல்லில் வாழ்ந்துள்ளார்.

ஏற்கனவே, Brueckner தனது கேரவனைக் காட்டி என்னால் இதில் போதைப்பொருட்களையும் குழந்தைகளையும் கடத்த முடியும், யாரும் கண்டுபிடிக்கமுடியாது என ஒருவரிடம் பெருமையடித்துக்கொண்டதாக தகவல் வெளியானதே, அந்த Dieter (65) என்பவரின் மகள்தான் இந்த Nicole.

இந்த Nicole ஏற்கனவே ஒரு திருட்டு சம்பவத்தில் Bruecknerக்கு உதவியதாக பொலிசாரிடம் போர்ச்சுக்கல் நாட்டு பெண்கள் இருவர் புகாரளித்துள்ளனர். அந்த பெண்களுக்கு நண்பராக இருந்துள்ளார் Nicole.

அந்த பெண்கள் இருவரும் தங்கள் வாழ்நாள் சேமிப்பான 100,000 யூரோக்களை வங்கியில் டெபாசிட் செய்ய சென்றுள்ளார்கள். அப்போது Nicole அவர்களுடன் இருந்துள்ளார்.

ஆனால், அன்று அவர்களால் பணத்தை டெபாசிட் செய்ய முடியவில்லை. இதை எப்படியோ தெரிந்துகொண்ட Nicole, வழியில் காரை நிறுத்தி இறங்கி, பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய (disposable phone) மொபைல் ஒன்றை வாங்கியுள்ளார்.

யாரிடமோ ஜேர்மன் மொழியில், உண்மை, என்னால் நிச்சயமாக கூற முடியும் என்று அவர் கூறியது மட்டும் அந்த பெண்களுக்கு புரிந்துள்ளது.

இரண்டு நாட்கள் கழித்து வெளியே சென்று அந்த பெண்கள் வீடு திரும்பும்போது அந்த 100,000 யூரோக்கள் அடங்கிய சூட்கேசைக் காணவில்லை.

பதறியடித்து பொலிஸ் நிலையம் சென்ற அந்த பெண்கள், புகாரளித்ததோடு, Nicole மீது சந்தேகம் இருப்பதையும் தெரிவித்துள்ளார்கள்.

ஆனால் பொலிசாரால் குற்றத்தை நிரூபிக்க முடியாததால் Nicole தப்பிவிட்டார். அதே நேரத்தில், தொலைபேசி அழைப்பு ஒன்றைத்தொடர்ந்து கனமான கருவிகளுடன் Brueckner தன் வீட்டிலிருந்து புறப்பட்டதை அவரது அயலகத்தார்கள் கண்டதாக தெரிவித்துள்ளார்கள்.

ஆக, Nicole தொலைபேசியில் அழைத்தது Bruecknerஐத்தான் என நம்பப்படுகிறது. Nicole தகவல் கொடுக்க Brueckner பணத்தை கொள்ளையடித்துள்ளார் என்றும் கருதப்படுகிறது.

இந்த வழக்குக்கும் மேட்லின் மாயமான வழக்குக்கும் என்ன சம்பந்தம் என்றால், எப்படி அந்த திருட்டு சம்பவத்தின்போது Nicole தொலைபேசியில் அழைத்து Bruecknerக்கு தகவல் கொடுத்தாரோ, அதேபோல், மேட்லினின் பெற்றோர் வீட்டில் இல்லை என்பது போன்ற தகவலையும் அவர்தான் கொடுத்திருப்பார் என பொலிசார் கருதுகிறார்கள். இதனால் வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்