ஒன்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜேர்மனியில் நிகழ்ந்துள்ள ஒரு விடயம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஒன்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜேர்மனிக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஜேர்மனி அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி, ஜேர்மனியில் 1.77 மில்லியன் அகதிகள் வசித்து வருகிறார்கள்.

இந்த எண்ணிக்கை 2019ஐக் கணக்கில் எடுத்துக்கொண்டால், அப்போதிருந்த எண்ணிக்கையை விட 62,000 குறைவாகும்.

இந்த எண்ணிக்கை குறைவுக்கு காரணம், பலரது அகதி நிலை அகற்றப்பட்டதாகும் என்கிறார் உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஒருவர். அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் இப்போது ஜேர்மனியில் வசிக்கவில்லை என்கிறார் அவர்.

செப்டம்பரில், லெஸ்போஸ் தீவிலிருந்து 1,500 அகதிகளை அழைத்துக்கொள்வதாக ஜேர்மனி உறுதியளித்திருந்தது.

அங்குள்ள ஒரு அகதிகள் முகாமில் தீவிபத்து ஒன்று ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களானதைத் தொடர்ந்து ஜேர்மனி அவ்வாறு அறிவித்திருந்தது.

அவ்வாறே அந்த தீவிலிருந்து செப்டம்பர் இறுதியிலிருந்தே அகதிகள் ஜேர்மனிக்கு வரத்தொடங்கிவிட்டார்கள்.

ஜேர்மனியைப் பொருத்தவரை, போர் நடக்கும் பகுதிகள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து எத்தனை அகதிகளை அது அழைத்துக்கொள்ளப்போகிறது என்ற கேள்வி பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலிலும் இடதுசாரியினர் அரசு அகதிகளுக்கு உதவ போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்கின்றனர், வலது சாரியினரோ அகதிகள் தொடர்பில் கடுமையான கொள்கைகளை கொண்டுள்ளனர்.

ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஏஞ்சலா மெர்க்கல் சிரிய அகதிகளுக்கு ஜேர்மன் எல்லைகளைத் திறந்ததைத் தொடர்ந்து 18 மாதங்களில் ஒரு மில்லியன் அகதிகள் வரை ஜேர்மனிக்கு வந்ததை மறக்கமுடியாது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்