அதிகரிக்கும் கொரோனா! ஜேர்மன் தலைநகரில் புதிய கட்டுப்பாடுகள் அமல்: மேயர் எச்சரிக்கை

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனி தலைநகர் பெர்லினில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் அங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

புதிய கட்டுபாட்டின் படி, தலைநகர் பெர்லினில் உள்ள உணவகங்களும் பார்களும் தினமும் இரவு 11 மணி முதல் காலை 06:00 வரை மூட வேண்டும் என பெர்லின் செனட் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாம் இப்போது செயல்படவில்லை என்றால் மீண்டும் முழு ஊரடங்கு விதிக்கப்படும் என பெர்லின் மேயர் மைக்கேல் முல்லர் எச்சரித்துள்ளார்.

செவ்வாயன்று கூடி பெர்லினின் ஆளும் செனட் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதாக அறிவித்தது.

.மது விற்பனையை தடை செய்தல், ஒன்றுகூட அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை குறைதல். கூடுதலாக, பூங்காக்களில் மக்கள் சந்திப்புக்கு தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

பெர்லினின் நான்கு மாவட்டங்கள் அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக மாறியுள்ளன, அதாவது 1,00,000 பேருக்கு 50 வழக்குகள் என்ற கணக்கில் தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கும் மேல் பதிவாகியுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்