ஜேர்மனியில் ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த கொரோனா! விதிமுறைகளை கடுமையாக்கிய அரசு

Report Print Gokulan Gokulan in ஜேர்மனி

ஐரோப்பாவின் மிகப்பெரும் பொருளாதாரத்தினை கொண்ட நாடான ஜேர்மனி கடந்த 24 மணி நேரத்தில் 4,000க்கும் அதிகமான புதிய கொரோனா நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளது. இது முன்னெப்போதும் உள்ள அளவை விட அதிகமானதாகும்.

கடந்த ஏப்ரல் 11-ம் திகதியிலிருந்து முழு முடக்கத்திலிருக்கும் ஜேர்மனி, கடந்த 24 மணி நேரத்தில் 4,058 புதிய கொரோனா நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளது. மேலும், 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நோய் கட்டுப்பாட்டு நிறுவனம் ஆர்.கே.ஐ (RKI) தெரிவித்துள்ளது.

இலையுதிர் கால விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் துவங்கப்படக்கூடிய நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் வெளிநாட்டு பயணங்களை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என அதிபர் அங்கேலா மேர்க்கெலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக ஜேர்மனியின் 16 மாநிலங்களிலும் உள்நாட்டு போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து ஆபத்தான மண்டலங்களில் இரவு நேர விடுதிகள் போன்றவற்றிற்கு அரசு தடை விதித்துள்ளது.

மேலும், மத்திய பெர்லினின் பகுதிகளில் இரவு 11 மணி முதல் உணவகங்கள் மற்றும் மதுக்கடைகளை மூடுமாறு ஜேர்மன் தலைநகர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பிராங்பேர்ட்டிலும் தொற்று பரவல் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையானது, பெருவெடிப்பு இல்லை என்றும், இது வெறுமென பரவலான எண்ணிக்கைதான் என்றும் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் சீபர்ட் கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்