தாய்லாந்து மன்னர் ஜேர்மனியில் இருந்துகொண்டு தாய்லாந்தை ஆட்சி செய்யகூடாது: ஜேர்மனியிலும் எதிர்ப்பு

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தன் சொந்த நாடான தாய்லாந்தை எப்போதாவது எட்டிப்பார்க்கும் தாய்லாந்து மன்னருக்கு ஜேர்மனியிலும் எதிர்ப்பு உருவாகத் தொடங்கிவிட்டது.

தாய்லாந்து மன்னரான மஹா வஜிரலோங்கார்ன் பெரும்பாலான நேரத்தை ஜேர்மனியில் அழகிகளுடன் உல்லாசமாக கழிப்பதிலேயே செலவிடுவதுண்டு. அதற்கு அவரது நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மக்கள் வீதிகளில் இறங்கி போராட, அதை அடக்குவதற்காக அவசர நிலை பிறப்பித்தார் வஜிரலோங்கார்ன்.

ஜேர்மனியிலியிலிருந்தவண்ணம் வஜிரலோங்கார்ன் தாய்லாந்தை ஆள ஜேர்மனி அனுமதிக்கக்கூடாது என்ற குரல் ஒலித்தவண்ணம் உள்ளது.

அப்படி குரல் கொடுத்து வருபவர்களில் ஒருவரான Junya Yimprasert என்பவர், ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலுக்கும், ஜேர்மன் நாடாளுமன்ற சபாநாயகருக்கும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Heiko Maas, தாய்லாந்து தொடர்பான அரசியல் விடயங்கள் ஜேர்மன் மண்ணிலிருந்து செய்யப்படக்கூடாது என அரசு ஏற்கனவே தெளிவுபடக் கூறிவிட்டதாக தெரிவித்தார்.

நம் நாட்டுக்கு விருந்தினர்களாக வருபவர்கள், நம் நாட்டிலிருந்தவண்ணம் அவர்கள் நாட்டு வேலைகளைச் செய்வதை ஜேர்மனி எப்போதுமே எதிர்த்துவந்துள்ளது என்றார் அவர்.

இந்த விடயம் குறித்து ஏற்கனவே தாய்லாந்து தூதருக்கு பல முறை தெரிவிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஒருவர், தாய்லாந்து அரசியல் விவகாரங்களை தாய்லாந்திலிருந்தவண்ணம் தாய்லாந்து பிரதமர் பார்த்துக்கொள்வதாகவும், மன்னர் ஜேர்மனிக்கு அவரது தனிப்பட்ட விடயங்களுக்காகவே வந்திருப்பதாகவும் அவர்கள் பக்கத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Junya Yimprasert

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்