பிரான்ஸ் தீவிரவாத தாக்குதல் தொடர்பில் ஜேர்மன் அதிபர் விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரான்ஸ் தேவாலயத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நாடே துக்கம் அனுசரிக்கும் நிலையில், ஜேர்மன் அதிபரான Frank-Walter Steinmeier அந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக வருந்தும் அதே நேரத்தில், தாக்குதலுக்கு பதிலாக வெறுப்பைக் காட்டக்கூடாது என அவர் எச்சரித்துள்ளார்.

இப்போதைக்கு பிரான்சில் உள்ளவர்கள் மட்டுமல்ல, மொத்த ஐரோப்பாவில் உள்ளவர்களும் செய்யவேண்டியது என்னவென்றால், இந்த மிருகத்தனமான செயலையும், அதன் பின்னணியில் உள்ள இஸ்லாமியவாத உள்நோக்கத்தையும் எதிர்த்து நிற்பதுதான்.

அதே நேரத்தில் ஜனநாயக சமூகத்தினரான நாம், இந்த செயலுக்கு வெறுப்பு மற்றும் அந்நிய நாட்டவர்கள் மீதான சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றின் அடிப்படையில் பதிலுக்கு பதில் செய்யக்கூடாது என்கிறார் அவர்.

வெளிப்படையான சமூகங்களை தற்காக்கும் அதே நேரத்தில் வன்முறையை எதிர்த்து நிற்பது, மற்றும் பொறுமை ஆகியவற்றை சமநிலைப்படுத்த முயற்சிப்பது சாதாரணமான விடயமல்ல, அது ஒரு சவால் என்பது உண்மைதான் என்கிறார் அவர்.

அங்கீகரிப்பும் பரஸ்பர மரியாதையும் நமது சமூகத்தின் அங்கங்கள், இப்படிப்பட்ட மிருகத்தனமான வன்முறையையும் இஸ்லாமியவாத உள்நோக்கங்களையும் எதிர்த்து நிற்பது ஒன்று, அதே நேரத்தில் நமது சமுதாயத்தை வெளிப்படையான ஒன்றாக பராமரிப்பது இன்னொன்று, அது மற்றொரு சவால் என்கிறார் Steinmeier.

இதற்கிடையில், பிரான்ஸ் தேவாலயத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய துனிசிய நாட்டு இளைஞன் பொலிசாரால் சுடப்பட்டதில், மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்