ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில் பயணிகளை மொத்தமாக வெளியேற்றிய பொலிசார்: பெட்டியுடன் சிக்கிய நபர்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
395Shares

ஜேர்மனியின் Frankfurt விமான நிலையத்தில் ஒருவர் பெட்டி ஒன்றை கைவிட்டுவிட்டு, அல்லாஹு அக்பர் என கத்தியபடி மாயமானதை அடுத்து ஒரு முனையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

Frankfurt விமான நிலையத்தின் ஒன்றாம் இலக்க முனையத்திலேயே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சனிக்கிழமை மாலை நேரம், கடவுச்சீட்டு சரிபார்க்கும் பகுதிக்கு வந்த அந்த நபர் திடீரென்று தாம் கொண்டு வந்த பெட்டியை அங்கே வைத்துவிட்டு, அல்லாஹு அக்பர் என கத்தியபடி, அங்கிருந்து மாயமாகியுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக பொலிசார் குவிக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் துரிதமாக வெளியேற்றப்பட்டனர்.

ஆனால் பரிசோதனையில் ஆபத்தான அம்சம் ஏதும் அந்த பெட்டியில் இல்லை எனவும், இந்த விவகாரம் தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சுமார் இரண்டரை மணி நேரம் மூடப்பட்டிருந்த அந்த முனையமானது உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து விமான நிலையத்திற்கான ரயில் வேவையும் முடக்கப்பட்டது. அதுவும் தற்போது செயற்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் மாகாணா பொலிசாருடன் மத்திய பொலிசாரும் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்