ஜேர்மனியில் தபாலில் வந்த வெடிகுண்டு... மூன்று பேர் காயம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares

நேற்று Neckarsulm என்ற நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் அலுவலகத்திற்கு தபால் ஒன்று வந்துள்ளது. வந்தது தபாலா அல்லது பார்சலா என்பது சரியாக தெரியவில்லை.

அந்த பார்சலில் இருந்த வெடிகுண்டு ஒன்று வெடித்ததில், அந்த அலுவலகத்தில் பணியாற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவருக்கு மோசமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக, அந்த கட்டிடத்திலிருந்து 100 பேரை பொலிசார் வெளியேற்றினர்.

செவ்வாயன்று Eppelheim என்ற இடத்திலும் இதேபோல் ஒரு பார்சல் வெடிகுண்டு வெடித்ததால், இந்த இரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்குமா என்பதை அறிய பொலிசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்