ஜேர்மனியில் பொதுமுடக்கத்தை நெகிழ்த்துவது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பு

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares

ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல், மூன்று கட்டங்களாக பொதுமுடக்கத்தை நெகிழ்த்துவது குறித்த திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவையாவன,

முதலில் ஒருவர் எத்தனை பேரை சந்திக்கலாம் என்பது குறித்த முடிவு செய்தல் அடுத்து பள்ளிகளும் தொழிற்கல்வி நிறுவனங்களும் திறப்பதைக் குறித்தது மூன்றாவதாக,விளையாட்டு, உணவகங்கள் மற்றும் கலாசாரம் தொடர்பில் எடுக்கப்பட இருக்கும் முடிவுகள்

முதல் கட்ட நெகிழ்த்தலுக்குப் பின் இரண்டு வாரங்கள் பொறுத்திருந்து கொரோனா பரவல் என்ன ஆகிறது, குறைகிறதா என்பதைப் பொறுத்து அடுத்த கட்ட நெகிழ்த்தலை செய்ய இருப்பதாக ஏற்கனவே மெர்க்கல் அறிவித்திருந்தார்.

மார்ச் மாதம் 3ஆம் திகதி, மெர்க்கலின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், தலைமை அலுவலரான Helge Braun மற்றும் மாகாணங்களின் தலைவர்களுடன் கலந்தாலோசித்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது தொடர்பாக திட்டம் ஒன்றை முன்வைக்க உள்ளார்கள். ஜேர்மனியைப் பொர்த்தவரை, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் புதிய கொரோனா பரவல் அதிகரித்தவண்ணம்தான் உள்ளது.

நேற்றைய நிலவரப்படி, ஒரே நாளில் 4,369 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படி கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க முக்கிய காரணம், திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்கள்தான் என்கிறார் Helge Braun.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்