ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் நடிகை திரிஷாவா? அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in கிசுகிசு

தற்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சித்தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் போராட்டம் நடத்திவருகின்றனர். திரைப்பட நடிகர் சிம்புவும் தன் வீட்டின் முன்பு 10 நிமிடம் அமைதிப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதற்கு தமிழகத்தில் மட்டுமல்ல வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் பிரபல நடிகை திரிஷா தான் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதில், திரிஷா மூலமாக தான் பீட்டா [PETA] என்ற வார்த்தை தமிழகம் முழுவதும் பரவியதாகவும், மிருக வதைக்கு எதிராக குரல் கொடுக்கும் இந்த இயக்கத்தில் திரிஷா மூலமாக திரைத்துறை பிரபலங்கள் பலர் இணைந்ததாகவும் கூறப்படுகிறது.

சாலைகளில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த நாய்களை திரிஷா மனித நேயத்தின் அடிப்படையில் ஆதரவளித்ததாகவும், அப்போது திரிஷாவின் செயல்களை கண்டு ஊக்குவித்து நாய்களை பீட்டா அமைப்பினர் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

திரிஷாவின் இந்த செயலைக்கண்டு அவரைப்போலவே ஆதரவற்ற விலங்குகளுக்கு உதவ பலர் முன்வந்ததாகவும், பீட்டா தமிழகத்தில் பரவிய அதேசமயம் இந்திய நாடு முழுவதும் பரவத் தொடங்கியது என்றும் கூறப்படுகிறது.

பெங்களூரில் நாய்களைக் கொன்று குவித்த போது உண்ணாவிரதம் இருந்த வரலட்சுமியுடன், அவரது நெருங்கிய நண்பரான விஷால் பீட்டா ஆதரவாளராக சேர்ந்ததாகவும், அதைத் தொடர்ந்து, விஷாலின் ஆதரவு பீட்டா இயக்கத்துக்கு பக்கபலமாக இருந்ததால் அவர்களது சார்பாக விருது வழங்கி கௌரவித்தார்கள் என கூறப்படுகிறது.

இதன் காரணமாகத் தான் விஷால் ஜல்லிக்கட்டுக்கு எதிரான தனது கருத்தைத் தெரிவித்தார் எனவும் கூறப்படுகிறது.

அப்போது விஷால் பேசிய பேச்சுதான், நேற்று சிம்பு அளித்த பேட்டியில் ஆங்கிலத்தில் சொல்லி கிண்டல் செய்ததாகவும், சக நடிகரான ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்று கேட்டுள்ளாரே, அவருக்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அவருக்கு அதைப் புரிய வைக்கவேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என அவர் தெரிவித்தார் எனவும் கூறப்படுகிறது.

மேலும் கிசுகிசு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments