ஆபாச கருத்து: பிரபல நடிகை கஸ்தூரியின் ஆவேச பேட்டி

Report Print Printha in கிசுகிசு

திரையுலக நடிகைகள் குறித்து சர்ச்சையான கருத்தை நான் தெரிவிக்கவில்லை என்று நடிகை கஸ்தூரி ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார்.

நடிகைகளை பட வாய்ப்புக்காக, படுக்கையறைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் உள்ளது என்று நடிகை கஸ்தூரி கூறியதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நடிகை கஸ்தூரி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, இரண்டு நாட்களாக என்ன செய்தி என தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நான் கிடைத்துள்ளேன்.

முற்றிலும் பொய்யான, கற்பனையான, உண்மைக்கு புறம்பாக நான் சொல்லவே இல்லாத ஒரு விஷயத்தை, நான் சொன்னதாக இணையதளம் முழுக்க பரபரப்பாக பிரபலப் படுத்தியுள்ளார்கள்.

இதை வெளியிட்டுள்ள ஊடகங்கள் யாரிடமும் நான் பேசவில்லை. மகளிர் தினத்துக்காக பிரபல ஆங்கில நாளிதழுக்கு மட்டும் பேட்டியளித்தேன், அதில் கூட நான் சொல்லாததை தான் எழுதியுள்ளார்கள்.

இது போன்ற என்னைப் பற்றிய கற்பனை கிசுகிசுக்கள் மற்றும் பொய்யான வதந்திகள் என்னை மட்டுமன்றி என்னுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது.

இதில் நான் குடும்பம் என்று கூறுவது, நான் சார்ந்துள்ள திரையுலகமும் தான். நான் கொடுத்த பேட்டியை எனது பேஸ்புக் பக்கத்தில் முழுமையாக படித்துவிட்டு, நான் கூறியதென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

மேலும் கிசுகிசு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments