தலைவலியால் அவஸ்தையா? இதோ நிவாரணங்கள்

Report Print Sahana in ஆரோக்கியம்
தலைவலியால் அவஸ்தையா? இதோ நிவாரணங்கள்
1492Shares

தலைவலியும், வயிற்று வலியும் தனக்கு வந்தால் தானே தெரியும் என்ற வார்த்தைகளில் எவ்வளவு உண்மையுள்ளது.

தலைவலி வருபவர்களின் வேதனை சொல்லி மாளாது. இதற்கு முக்கிய காரணம் மன மற்றும் வேலை அழுத்தம், மசாலா கலந்த உணவுகள்.

இதனை அப்போதைக்கு தீர்வு காண, மாத்திரைகள் சாப்பிடுவார்கள். ஆனால் அவை சிறுநீரகத்தை பாதிக்கும்.

அதற்கு பதில் வீட்டில் உள்ள சில பொருட்களின் மூலம் தலைவலிக்கு தீர்வு காணலாம்.

லாவெண்டர் எண்ணெய் (Lavender Oil)

வாசனையில் சிறந்த லாவெண்டர் ஆயில் தலைவலியை போக்குவதிலும் முக்கியபங்கு வகிக்கிறது. உடம்புக்கு குளிக்கும் போது வெந்நீரில் 2 அல்லது 3 துளிகள் லாவெண்டர் ஆயிலை கலந்து குளிப்பதால் தலைவலி குறையும் (காரணம் நாம் அந்த ஆயிலை நுகர்வதால்). இல்லையேல் தலைவலிக்கும் போது சிறு தடவி கொள்ளலாம்.

மிளகுக்கீரை எண்ணெய் (Peppermint Oil)

டென்ஷனால் வரும் தலைவலிக்கு இந்த எண்ணெய் சிறந்தது. இதில் உள்ள வாஸ்கொ- டியலிட்டிங் மற்றும் பண்புகள் வாஸ்கொ- கான்ஸ்டரிட்டிங் (Vaso-Constricting and Vaso-Dilating) பண்புகள் ரத்த ஓட்டத்தை சீராக்கும். பெரும்பாலும் ஒற்றை தலைவலி குறைவான ரத்த ஓட்டத்தால் ஏற்படும். இந்த எண்ணெய் ரத்தநாளங்களை சீராக திறக்கவும், மூடவும் உதவுகிறது.

பசலைக்கீரை எண்ணெய் (Basil Oil)

பீட்சா போன்றவற்றில் பயன்படும் பசலை கீரையின் எண்ணெய், டென்ஷன் மற்றும் தசை சுருக்கத்தால் ஏற்படும் தலைவலியை போக்க உதவுகிறது. தலைவலியின் போது இதனை நுகர்வதால் மனதை ரிலாக்ஸ் ஆக வைக்க உதவுகிறது.

ஆளி விதைகள் (Flaxseed)

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவினை உட்கொள்வதன் மூலமும் தலைவலி குறையும். ஆளி விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இதனை உட்கொள்வதன் மூலம் தலைவலி குறைகிறது.

இது தவிர உணவுகளில் கட்டுப்பாடுகள் மற்றும் தலைவலிக்கும் இடத்தில் மென்மையாக மசாஜ் செய்வதன் மூலமும் நிவாரணம் பெறலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments