கருப்பட்டியில் இவ்வளவு நன்மைகளா? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க

Report Print Santhan in ஆரோக்கியம்

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனை நீரில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த பனை நீரில் இருந்து தயாரிக்கப்படுவது தான் கருப்பட்டி. இதனை பனை வெல்லம் என்றும் அழைப்பர். இது தீங்கு விளைவிக்கும் சர்க்கரைக்கு சிறந்த மாற்றாகும்

கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம், ஏராளமான நன்மைகள் கிடைக்கும், இப்போது சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி அல்லது பனை வெல்லத்தை காபி, டீயில் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

  • கருப்பட்டியில் உடலின் அத்தியாவசிய செயல்பாட்டிற்குத் தேவையான கார்போஙைடரேட் நிறைந்துள்ளது. இதனை ஒருவர் குடிக்கும் காபி அல்லது டீயில் சேர்த்துக் குடிப்பதால், கலோரிகளின்றி உடலின் ஆற்றல் அதிகரிக்கும். ஆனால் தற்போது நாம் பயன்படுத்தும் சர்க்கரையில் கலோரிகள் மிகவும் அதிகம் என்பதை மறக்க வேண்டாம்.
  • கருப்பட்டியை ஒருவர் தொடர்ச்சியாக எடுத்து வந்தால், அது கல்லீரல் செயல்பாட்டை சீராக்கும். மேலும் கருப்பட்டி கல்லீரலில் தேங்கியுள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, கல்லீரலை சுத்தம் செய்ய உதவும்.
  • சளி, இருமல் போன்றவற்றில் இருந்து விடுபட வேண்டுமானால், அன்றாடம் குடிக்கும் காபி, டீயில் கருப்பட்டியை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் மூக்கடைப்பில் இருந்து விடுதலை அளிப்பதோடு, தொண்டை புண்ணையும் சரிசெய்யும்.
  • கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் சீராக்கி, இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கும்.
  • கருப்பட்டி அல்லது பனை வெல்லம் ஒற்றை தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். அதற்கு கருப்பட்டியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம் அல்லது குடிக்கும் டீயில் கருப்பட்டி சேர்த்து குடிப்பதன் மூலமும் ஒற்றைத் தலைவலி நீங்கும்.
  • கர்ப்பிணிகள் கருப்பட்டியை உணவில் சேர்த்துக் கொள்வதால், அது உடலில் இரும்புச்சத்தின் அளவை சீராக பராமரிப்பதோடு, ஏழாவது மாதத்தில் இருந்து பெண்கள் சந்திக்கும் வலியை தடுத்து, பிரசவம் சுகமாக நடக்க உதவும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers