வெந்தய நீரை சூடாக்கி குடியுங்கள்: என்ன ஆகும்?

Report Print Printha in ஆரோக்கியம்
940Shares
940Shares
lankasrimarket.com

வெந்தயத்தில் அதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் மினரல்ஸ், பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளது.

அந்த வெந்தயத்தை ஊற வைத்து குடிப்பது, வெந்தயப் பொடியை நீரில் கலந்து குடிப்பது மற்றும் வெந்தயத்தை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூலம் பல்வேறு நன்மைகளை பெறலாம்.

அதோடு மட்டுமில்லாமல், ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து, மூடி வைத்து 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வெதுவெதுப்பான நிலையில் வடிகட்டி அதனுடன் சிறிது தேன் கலந்தும் குடிக்கலாம்.

நன்மைகள்
  • குடல் மற்றும் உணவுக் குழாய்களில் தங்கும் நச்சுக்கள் மற்றும் கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றி, குடல் மற்றும் சிறுநீரகத்தை பாதுகாக்கும்.
  • அதிகப்படியான மன அழுத்தம் காரணமாக ரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்கள் இந்த வெந்தய டீயை குடிக்கலாம்.
  • மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி மற்றும் உடல் வலிகள் மற்றும் தசைப் பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் வெந்தய டீயை குடித்தால், கொலஸ்ட்ரால் பிரச்சனை கட்டுக்குள் வரும்.
  • தினமும் ஒரு கப் வெந்தய டீயை குடிப்பதால், இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும். அதனால் இதயநோய்கள் வராது.
  • வெந்தய டீயானது அசிடிட்டி, நெஞ்செரிச்சல், மற்றும் உடலில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை தடுத்து, அல்சர் போன்ற நோய்கள் வராமலும் தடுக்கிறது.
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தய டீயை குடித்தால் அது சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
  • தினமும் இந்த வெந்தய டீ குடித்து வர முடி அடர்த்தியாக இருப்பதுடன், வளர்ச்சி அதிகரிக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்