பிரசவ காலம் நெருங்கும்போது ஆசனவாயில் எரிச்சல் ஏற்படுவது ஏன்?

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்
359Shares

நிறை மாத கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்குப் பல தேவையற்ற பயம் ஏற்படும். இது ஒருவித எதிர்பார்ப்பின் காரணமாக ஏற்படுவது.

ஆனால் எதற்கும் கவலைகொள்ளாமல், உங்களை அமைதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பொதுவாக கர்ப்பத்தின் 9வது மாத துவக்கத்தில் இருந்து பிரசவ விலி ஏற்படலாம்.

பொதுவாக பெரும்பாலானோருக்கு இடுப்புப் பகுதிகளில் வலி துவங்கும், அதிகமா மூச்சிறைக்கும்.

உடலில் சில மாற்றங்கள் தெரியும். கால்கள் கூட வலிக்க ஆரம்பிக்கும். கடைசியா தான் பிரசவ வலி உச்சத்திற்கு வரும். அது பல விதமாக வரலாம். இடுப்பு, வயிறு முழுவதும், அடி வயிறு இடுப்போடிணைந்து கால்கள்,நடு வயிறு, முதுகு என்று வலி எங்கு வேண்டுமானாலும் வரும்.

ஆசனவாயில் வலி ஏற்படும். கர்ப்பப்பை குழந்தையை தாங்கி அதை சுற்றிலும் பாதுகாப்பு கவசத்தை உருவாக்கி இருக்கும். இந்த மாதிரியான சமயங்களில் கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் மாற்றங்களால் மலச்சிக்கல், ஆசனவாயில் வலி, நமைச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

இதை சமாளிக்க மருத்துவ ஆலோசனையுடன் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

பிரசவ அழுத்தம் காரணமாக சிறுநீர் பையில் அழுத்தம் ஏற்பட்டு அடிக்கடி சிறுநீர் வெளியேறும். பிரசவ கால நீரிழிவ பிரச்னை உள்ளவர்களுக்கு பிரசவ தேதி நெருங்கும்போது மட்டுமல்ல, மூன்று மாதத்தில் இருந்தே அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னை ஆரம்பித்துவிடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்