வாழைத்தண்டை இப்படி சாப்பிட்டு பாருங்க: அற்புதம் ஏராளம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

நம்முடைய பாரம்பரிய மருத்துவமான பாட்டி வைத்திய முறையில் வாழைத்தண்டு பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

தீராத பல நோய்களையும் தீர்த்து வைக்கும் அற்புதமாக பொருளாக இந்த வாழைத்தண்டு விளங்குகின்றது.

வாழைத்தண்டில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன

வாழைத்தண்டை எப்படியெல்லாம் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்.

  • வாழைத் தண்டில் மிக அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இதை நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால், நம்முடைய குடலுக்குள் தேங்கியிருக்கும் மணல், கற்களை வெளியேற்றும் ஆற்றல் இதற்கு உண்டு.
  • சரியாக சிறுநீர் வராமல், அல்லது சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உண்டாகிறவர்கள் அடிக்கடி உணவில் வாழைத்தண்டை சேர்த்து வந்தால் சிறுநீர் பிரிவது எளிதாகும். மலச்சிக்கல் பிரச்னையும் தீரும்.
  • தினந்தோறும் வாழை தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தீர்கள் என்றால், அடிக்கடி வரும் வறட்டு இருமல் குணமாகும்.
  • அடிக்கடி தாகம் எடுப்பவர்கள் வாழைத்தண்டை இடித்து சாறெடுத்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
  • காது சம்பந்தப்பட்ட பிரச்னைகள், கருப்பை சம்பந்தப்பட்ட நோய்கள், ரத்த சுத்திகரிப்பு போன்ற பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும் என்று நினைத்தால் தினமும் ஒரு கப் வாழைத்தண்டு சூப் குடித்து வாருங்கள்.
  • வாழைத்தண்டை நன்கு வெயிலில் உலர்த்தி தினமும் அதில் ஒரு ஸ்பூன் எடுத்து தேன் கலந்து குழைத்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை தீரும்.
  • பாம்பு கடித்தாலோ அல்லது விஷப் பூச்சகள் ஏதாவது தீண்டிவிட்டாலோ உடனே அந்த இடத்தை விஷம் ஏறாமல் இருகு்க கீறி விடுவார்கள். அதன்பின், அந்த இடத்தில் வாழைத்தண்டு சாறை தடவி விட்டு, ஒரு டம்ளர் அளவுக்கு குடிக்கக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் எப்பேர்ப்பட்ட விஷமும் முறிந்துவிடும்.
  • தீக்காயங்கள் வெகு நாட்களாக ஆறாமல் இருந்தால், வாழைத்தண்டை எடுத்து நெருப்பில் சுட்டு, அந்த சாம்பலை எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து குழைத்துத் தடவுங்கள். எப்படிப்பட்ட தீக்காயமும் ஆறிவிடும்.
  • வாழைச்சாறுடன் கொஞ்சம் கடுக்காயை சேர்த்து கலந்து சாப்பிட ஆசனவாய் எரிச்சல், மூலநோய் ஆகிய பிரச்னைகள் தீரும்.
  • கை, கால் எரிச்சல், வெள்ளைபடுதல், மாதவிலக்கின் போது ஏற்படும் வலி ஆகியவை விலகும். வாழைப்பூச்சாற்றுடன் கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்தும் பருகலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்