வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் குடியுங்கள்!

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்

நல்லெண்ணையில் உள்ள துத்தநாகம், தாமிரம், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் நிறைந்துள்ளன.

மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படும் நல்லெண்ணெயில் விட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும்.

அடி வயிற்றுப்பகுதியில் சிலருக்கு அதிக அளவில் ஏற்படும் உஷ்ணத்தால் வயிற்று வலி, சிறுநீர் பிரிவதில் சிரமம் ஏற்படும், அப்பொழுது நல்லெண்ணெய் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.

தினமும் காலையில் எழுந்து பல் தேய்த்த பின்னர் சிறிதளவு நல்லெண்ணையை வாயில் ஊற்றி 10 நிமிடம் அப்படியே வாய்க்குள்ள பற்களுக்கிடையே நன்றாக படும்படி கொப்பளிக்க வேண்டும்.

நன்கு நுரைத்து வெண்மை நிறமாக மாறி இருக்கும் போது வெளியே கொப்பளித்து விடவேண்டும். இப்படி செய்வதால் பல் வலி, ஈறு வீக்கம், தலைவலி சரி செய்யப்படும்.

நல்லெண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டிகள் வரவிடாது. உடலில் வலி இடத்தில் நல்லெண்ணெயை தேய்த்து மசாஜ் செய்து வந்தால் வலி நீங்கும்.

கர்ப்பிணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள எலும்புகளுக்கு கால்சியம் அதிகம் கிடைக்குமாறு செய்கிறது.

எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது.

தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம், தலைமுடிக்கும் ஊட்டம் அளிப்பதால் முடி உதிர்தல் நிற்கும்.

காலையில் ஒரு டீஸ்பூன் வெறும் வயிற்றில் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்
  • குடலியக்கம் சீராக நடைபெற்று மலச்சிக்கல் இருக்காது.
  • ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைக்கிறது.
  • உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சியுடன் இருக்கும்.
  • இரத்த அழுத்தம் சீராகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்