தொடர்ந்து மூன்று வாரம் பப்பாளி விதைகளை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Report Print Jayapradha in ஆரோக்கியம்

பப்பாளியில் இவ்வளவு நன்மைகளா இருக்கின்றது என நாமே ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கு அதில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகக் கொட்டிக் கிடக்கின்றன.

ஆனால் பப்பாளிப்பழத்தை சாப்பிடுவதைவிட அதன் விதைகளில் தான் சத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. நாம் ஏன் கட்டாயம் பப்பாளி விதையைச் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?

பப்பாளி விதையை எப்படி சாப்பிடுவது
 • பப்பாளி விதை சிறிது கசப்பாகவும் சிறிது காரத்தன்மையுடனும் இருக்கும். அதனால் தான் மிளகுடன் பப்பாளி விதை கலப்படம் செய்கிறார்கள்.
 • தினமும் பத்து முதல் 15 பப்பாளி விதைகளை எடுத்து நசுக்கி சாறாகவும் பயன்படுத்தலாம். அல்லது அரைத்து காய்கறிகளுடன் சேர்த்தோ சாப்பிட்டு வரலாம்.
 • பப்பாளி விதை சாப்பிட ஆரம்பித்த முதல் இரண்டு நாட்கள் சிறிய அளவிளான பப்பாளியை எடுத்துக்கொண்டு அதன் சில விதைகளை மட்டும் எடுத்து அப்படியே சாப்பிட ஆரம்பியுங்கள்.
 • பின் இரண்டு நாட்கள் சாப்பிட ஆரம்பித்ததும் உங்களுக்குப் பழகிவிடும். அதன்பின் விதையை எடுத்து நன்கு அரைத்து கால் ஸ்பூன் அளவுக்கு சாப்பிட ஆரம்பியுங்கள்.
 • பின் இரண்டாவது வாரம் அரை ஸ்பூன் அளவுக்கும் மூன்றாவது வாரத்திலிருந்து ஒரு ஸ்பூன் அளவுக்கும் சாப்பிட வேண்டும்.
நன்மைகள்
 • குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்னை சரிசெய்வதோடு வயிற்றில் உள்ள புழுக்களையும் வெளியேற்றவும் உதவுகின்றது.
 • ஆர்த்ரைடிஸ், மூட்டு வலி, போன்ற பிரச்சனைகளின் மூலம் உண்டாகும் வீக்கத்தை குறைத்து, வலியைப் போக்குகிறது.
 • கல்லீரலில் உள்ள இழைநார்கள் சரியாக வளர்ச்சியடைய பப்பாளி விதை உதவும். கல்லீரல் வீக்கம் போன்ற கல்லீரல் சம்பந்தப்பட்ட அத்தனை வியாதிகளையும் போக்கும் தன்மை கொண்டது.
 • சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கவும் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பைத் தடுக்கவும் பப்பாளி விதை மிகவும் உதவியாக இருக்கிறது
 • பாக்டீரியா மற்றும் வைரஸால் உண்டாகும் நோய்க்கிருமிகளைத் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது.
 • பப்பாளி விதையில் மிக அதிக அளவில் என்சைம்கள் உணவு மண்டலத்தின் ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.
 • பப்பாளி விதையில் உள்ள மூலப்பொருள்கள் மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், சருமப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து காக்கும் தன்மை கொண்டது.
குறிப்பு
 • மேலும் மிளகை எந்தெந்த உணவில் சேர்க்கப்படுகின்றதோ அதற்கு பதிலாக இந்த பப்பாளி விதைகளை நசுக்கிப் பயன்படுத்தலாம். மிளகின் அதே சுவையை இந்த விதைகளும் உங்களுக்குக் கொடுக்கும்.
 • மேலும் சாலட், சூப், இறைச்சி ஆகியவற்றுடன் இந்த விதைகளை அரைத்துப் பயன்படுத்தலாம்.
 • கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருப்பவர்களும் அந்த குறிப்பிட்ட காலகட்டங்களில் பப்பாளி விதை சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்