பெயின்கில்லர் மாத்திரைகள் இதயநோய்களைத் தோற்றுவிக்குமாம்

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்
22Shares

பொதுவாக வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும் பெயின்கில்லரானது மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய்களைத் தோற்றுவிக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது.

டைக்லோஃபெனாக் (Diclofenac) ஆனது வழமையாக வலிகள் மற்றும் வீக்கங்களை போக்கவென பெருமளவில் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

ஆனால் அண்மையில் மேற்கொள்ளப்ட்ட அய்வொன்று மேற்படி மருந்துப்பாவனையானது இருதய நோய்களைத் தோற்றுவிப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கென 6.3 மில்லியன் மக்களில் மேற்கொள்ளப்பட்ட தரவுப் பகுப்பாய்வில் டைக்லோஃபெனாக் மருந்தை எடுத்துக்கொண்டவர்கள் 30 நாட்களுக்குள் இருதய நோய்க்கான அறிகுறிகளைக் காட்டியிருந்தனர்.

ஆனாலும் மேற்படி ஆய்வானது அவதானங்களினடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகையால் உண்மையில் டைக்லோஃபெனாகிற்கும், இருதய நோய்களுக்கும் தொடர்புள்ளதா என திட்வட்டமாக கூறமுடியாத நிலையில் ஆய்வாளர்கள் உள்ளனர்.

இது மருத்துவ சோதனை மூலமாக மட்டுமே உறுதிப்படுத்தப்பட முடியுமாயினும் அது நெறிமுறைக்கு முரணானது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்