உடம்பு வலி சும்மா பின்னி எடுக்குதா? இந்த டீயை குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக உடல் வலி என்பது நம் உடலுக்குள் இருக்கும் பாதிப்புகளின் அறிகுறி தான்.

வேலை பளு, அலுவலகத்தில் குனிந்து நிமிர்ந்து வேலை செய்யமால் நீண்ட நேரம் ஓரே இடத்தில் அமருவது போன்ற காரணங்களாலும் உடல் வலியை நாம் அன்றாடம் சந்திக்கின்றோம்.

உங்கள் உடலில் அதிகமான அளவு நீர் சேர்வதால், தசைகள் வீக்கமுற்று, நரம்புகளுக்கு ஒரு வித அழுத்தம் உண்டாகிறது. இதனால் உடல் வலி உண்டாகிறது.

இதற்கு மருந்துகளை விட உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்கள் மூலமாகவே எளிதான முறையில் இந்த உடல் வலிகளைப் போக்க முடியும். அவை என்பதை பார்ப்போம்.

தேவையானவை

  • மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன்
  • சூடான பால் - ஒரு கிளாஸ்

செய்முறை

ஒரு கிளாஸ் சூடான பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

பால் சிறிது ஆறியவுடன் அதில் சிறிதளவு தேன் சேர்க்கவும். பின் இந்த கலவையை உடனடியாக பருகவும்.

இரவு உறங்கச் செல்வதற்கு முன் ஒரு முறை தினமும் இதனை பருகலாம்.

உடல் வலியைப் போக்குவதில் சிறந்த பலன் அளிப்பது இந்த மஞ்சள். அழற்சி எதிர்ப்பு, வலி நிவாரணி, மற்றும் குணப்படுத்தும் தன்மை போன்றவற்றைக் கொண்டிருப்பதால், உடல் வலியை எதிர்த்து போராடி, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு தன்மையையும் அதிகரிக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்