வாந்தி வருவதை தடுக்க வேண்டுமா? இதோ பயனுள்ள வீட்டு வைத்தியம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக நம்மில் பலருக்கு தூர பயணங்கள் போகும் போது நம்மை அறியாமலே வாந்தி ஏற்படுவதுண்டு.

நமக்கே தெரியாமல் அதிக அளவு உணவை நாம் எடுத்துக் கொள்வோம். செரிமான அளவிற்கு அதிகமாக உண்ணும்போது செரிமான மண்டலம் வாந்தியை ஏற்படுத்தும்.

வாந்தி ஒரு பெரிய தொற்றுநோய்க்கான அறிகுறியாக விளங்குகின்னறது.

ஏனெனில் உணவில் உள்ள நோய்க்கிருமிகள் எளிதில் கொல்லப்பட முடியாது. அந்த நோய்க்கிருமிகள் வாந்தியைத் தூண்டுகிறது எனப்படுகின்றது.

இருப்பினும் பலநேரங்களில் நம்மால் வாந்தியை கட்டுப்படுத்த முடியாது. இதற்காக மருந்துகளை உட்கொள்ளுவது தவறான செயலாகும்.

இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • ஒரு சிறிய துண்டு இஞ்சியை நசுக்கி தண்ணீரில் போட வேண்டும். அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து நாள் முழுதும் இந்த நீரை அருந்த வேண்டும். இஞ்சி வயிற்றின் எரிச்சலை போக்கி உடனடி நிவாரணம் கொடுக்கும்.
  • ஒரு கிராம்பு துண்டை வாயில்போட்டு நன்றாக மெல்ல வேண்டும். கிராம்பின் வாசனையும் சுவையும் உடனடியாக வாந்தியை கட்டுப்படுத்தும். நாவின் சுவைமொட்டுகளில் ஒரு மாற்றத்தை உண்டாக்கும்.
  • வாந்தியெடுத்தல் உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம், முதலிய பல்வேறு அளவு உப்புகளின் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும் திறனைக் கொண்டிருப்பதால் சர்க்கரை மற்றும் உப்பு நீரின் கலவையை குடிப்பதன் மூலம் உடலை திறமையான செயல்பாட்டு வரம்புக்கு ஏற்றவாறு சமன் செய்யலாம்.
  • ஒரு டம்பளர் தண்ணீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து பருகலாம். தேவைபட்டால் சிறிது தேனை சேர்த்து கொள்ளலாம். எலுமிச்சையில் உள்ள வைட்டமின்களும் மினரல்களும் உடனடியாக வாந்தியை தடுத்து நிறுத்துகின்றன.
  • ஒரு சிறிய இடைவெளியில் சோம்பை சிறிது சிறிதாக சுவைக்கும்போது வாந்தி கட்டுப்படும்.இது வாயின் சுவையை புதுப்பித்து புத்துணர்ச்சியை கொடுக்கும் .

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers