வெறும் வயிற்றில் தினமும் காலையில் ஓம நீரை குடிங்க... நன்மைகள் ஏராளமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

ஆயுர்வேத மருத்துவத்தில் ஓமம் பல ஆரோக்கிய பிரச்னைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

ஓமத்தில் தைமோல் என்னும் உட்பொருள் உள்ளது. இது தான் ஓமத்திற்கு தனித்துவமான சுவை மற்றும் மணத்தைக் கொடுக்கிறது.

ஓம விதைகள் உணவுகளுக்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகின்றது.

குறிப்பாக இது செரிமானத்தை சீராக்குவதில் இருந்து, பல் மற்றும் காது வலிகளை சரிசெய்வது வரை சரி செய்கின்றது.

ஓமத்தை அன்றாட உணவில் சேர்த்து வரலாம். இல்லாவிட்டால் அதனை நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்தும் வரலாம்.

அந்தவகையில் ஓம நீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

எப்படி தயாரிப்பது?

அதற்கு 2 டீஸ்பூன் ஓமத்தை லேசாக வறுத்து, ஒரு கப் நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

வேண்டுமானால், ஓமத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்தும் பருகலாம். பின் மறுநாள் காலையில் ஓமத்தை நீரில் நன்கு நசுக்கி வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

நன்மைகள்
  • ஓம நீரை தினமும் குடித்து வாருங்கள். இதனால் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
  • ஓம நீரை தினமும் குடித்து வந்தால், உணவுகள் சரியாக செரிமானமாகி, உடல் எடை இழப்பிற்கு உதவியாக இருக்கும்.
  • ஓமத்தை அல்லது ஓம நீரை ஒருவர் உட்கொண்டால், அதில் உள்ள தைமோல், வயிற்றில் செரிமான திரவத்தின் சுரப்பிற்கு உதவி, செரிமான செயல்பாட்டை சீராக்கும்.
  • பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் மலச்சிக்கல் மற்றும் வயிற்று உப்புசத்தினால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் ஓம நீரை தினமும் குடித்து வந்தால், இத்தகைய பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.
  • அளவுக்கு அதிகமாக உட்கொண்டு அசிடிட்டி ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், சோம்பு மற்றும் ஓமத்தை ஒன்றாக வாயில் போட்டு மெல்லுங்கள். இல்லாவிட்டால் ஓம நீரைக் குடியுங்கள்.
  • ஒரு டம்ளர் ஓம நீரைப் பருகுவது. அதிலும் நீரில் ஓமத்துடன், சிறிது துளசி இலைகளையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி பருகினால், நெஞ்சி சளி பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers