உங்களுக்கு தொடையில் இப்படி அசிங்கமான கோடுகள் வருகின்றதா? இதனை எப்படி சரி செய்வது?

Report Print Kavitha in ஆரோக்கியம்
317Shares

பொதுவாக சிலருக்கு ஆங்காங்கு வரி வரியாக கோடுகள் காணப்படும்.

இதனை செல்லுலைட் அல்லது செல்லுலைட் என்பது கெட்டியான கொழுப்புத் திசுக்கள் என்று அழைக்கப்படுகின்றது.

வெள்ளை நிறத்தில் தொடை, கை, இடுப்பு, பிட்டம் மற்றும் வயிற்றுப் பகுதி போன்ற இடத்தில் கோடு கோடாக இருக்கும்.

இந்த கொழுப்பு திசுக்கள் ஒருவருக்கு பல காரணங்களால் ஆங்காங்கு தேங்கியிருக்கும்.

தற்போது இந்த கோடுகள் ஏன் வருகின்றது? எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம்.

இந்த கோடுகள் ஏன் வருகின்றது?

 • ஒருவர் தினமும் போதுமான அளவு நீரைப் பருக்காவிட்டால் அல்லது உடல் வறட்சியுடன் இருந்தால், செல்லுலைட் அதிகமாக உருவாகும்.
 • ஒருவர் நீண்ட நேரம் ஒரே இடத்தில், ஒரே நிலையில் இருந்தால், அது இரத்த ஓட்ட அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தி, அதன் விளைவாக செல்லுலைட்டை உருவாக்கும்.
 • ஜங்க் உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், செல்லுலைட்டை உருவாக்கும்.
 • நீங்கள் மேற்கொண்டு வந்த டயட்டை தவிர்க்கும் போது, கொலாஜன் உற்பத்தி குறைந்து, சருமம் சுருங்கியும் விரிவடையாமலும் அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும்.
 • ஒருவர் மிகவும் இறுக்கமான உடைகளை அணியும் போது, குறிப்பிட்ட பகுதியில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு, செல்லுலைட்டை உண்டாக்குகிறது.
 • குளிக்கும் போது சிலர் தேய்த்துக் குளிக்காமல் இருப்பார்கள் இதனாலும் செல்லுலைட்டை உண்டாக்குகிறது.
 • ஒருவர் தினமும் மது அருந்தும் மற்றும் புகைப் பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், உடலில் டாக்ஸின்கள் தேங்கி, கொழுப்புச் செல்களின் அளவு அதிகரித்து, செல்லுலைட் பிரச்சனையை உண்டாக்கும்.
 • உடலுழைப்பு இல்லாமை. அதாவது உடற்பயிற்சி செய்யாமை இருப்பதனாலும் செல்லுலைட் உருவாக்கத்தின் பின்னணியில் இருக்கும் மற்றொரு காரணமாகும்.
எப்படி சரி செய்யலாம்?
 • தான் எந்த ஒரு வேலையாக இருந்தாலும், அவ்வப்போது சிறு இடைவெளி எடுத்து நடைப்பயிற்சியை மேற்கொள்ள சொல்கிறார்கள். இச்செயலால் கொழுப்பு தேக்கம் தடுக்கப்படும்.
 • அழற்சி எதிர்ப்பு உணவுப் பொருட்களான சால்மன், அவகேடோ, நற்பதமான பெர்ரிப் பழங்கள், க்ரீன் டீ, ஆலிவ் ஆயில் மற்றும் நீர் போன்றவற்றை சாப்பிடுங்கள்.
 • மிகவும் இறுக்கமான உடைகளை அணிவதை தவரித்து விடுங்கள்.
 • செல்லுலைட் மறைய வேண்டுமென்று நினைத்தால், தினமும் குளிக்கும் போது பாடி பிரஷைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்க உதவி, புதிய செல்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.
 • அளவுக்கு அதிகமாக மது அருந்துவது குறைக்க வேண்டும்.
 • தினமும் குறைந்தது 1/2 மணிநேரம் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், உங்கள் உடலை அசைக்கக்கூடிய வேலையை செய்யுங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்