மாதுளையால் சாப்பிடுவதனால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாக மாதுளையும் உள்ளது.

இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு அளப்பறியா நன்மைகளை வழங்கும் என்ற தகவல் அனைவரும் அறிந்த தகவலே.

இருப்பினும் மாதுளை சாப்பிடுவதனால் சில விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த பக்க விளைவுகள் அனைத்தும் தனிநபர் நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்தது என்று ஆய்வுகள் கூறுகிறது.

அந்தவகையில் தற்போது மாதுளையால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.

Ridvan Arda/Alamy

  • மாதுளை அலர்ஜிகள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. அரிப்பு, வீக்கம், தொண்டையில் எரிச்சல், வயிற்று வலி மற்றும் படை நோய் மற்றும் மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம், காதுகளில் வீக்கம் ஆகியவை ஏற்படுத்தும். மாதுளை சாப்பிட்ட10 நிமிடத்தில் அரிப்பு தொடங்கினால் மருத்துவரை அணுகுவது நல்லது.

  • அமிட்ரிப்டைலைன் (எலவில்), டெசிபிரமைன் (நோர்பிராமின்), ஃப்ளூக்ஸெடின் (புரோசாக்), ஒன்டான்செட்ரான் (ஜோஃப்ரான்), டிராமடோல் (அல்ட்ராம்), ரோசுவாஸ்டாடின் (க்ரெஸ்டர்) போன்ற மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது மாதுளை சாப்பிடுவது கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

  • உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள், ஏ.சி.இ இன்ஹிபிட்டர்கள் (கபோடென், வாசோடெக், பிரின்வில், அல்டேஸ், ஜெஸ்ட்ரில், முதலியன) மற்றும் ஆண்டிஹைபர்டென்சிவ் மருந்துகள் (தியோவன், கோசார், கார்டிஸெம், லேசிக்ஸ்) போன்றவற்றுடனும் மாதுளை குறுக்கீடு செய்யும். உயர் இரத்த அழுத்த மருந்துகள் சாப்பிடுபவர்கள் மாதுளை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.

  • குறைந்த இரத்த அழுத்தம் அல்லது இரத்த அழுத்த அளவுகளில் கட்டுப்பாடற்ற ஏற்ற இறக்கங்கள் உள்ளவர்கள் மாதுளம்பழங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

  • அறுவை சிகிச்சையின் போது மாதுளை சிக்கல்களை ஏற்படுத்த இதுவே காரணமாகும். நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தால் அதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பிருந்து மாதுளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

  • மாதுளை சாறு கர்ப்ப காலத்தில் அவசியமான ஒன்றாக இருந்தாலும் அதனை மற்ற வழிகளில் எடுத்துக்கொள்வது சற்று ஆபத்தானதுதான். அலர்ஜிகள் இருந்தால் இதனை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது, குறிப்பாக இதன் விதைகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

  • சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இதனை சாப்பிடுவதை நிறுத்துவதுதான் நல்லது. ஏனெனில் குறிப்பிட்ட அளவை விட அதிகளவு சர்க்கரை உள்ளது.

  • மாதுளையை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் அதிகளவு கலோரிகள் உள்ளது. கலோரிகள் அதிகமுள்ள இதனை எடுத்துக்கொள்ளும் போது இது எடை குறைப்பில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

  • மாதுளையால் சருமத்தில் அலர்ஜிகள் ஏற்பட்டால் அந்த இடத்தை தேய்க்கவோ அல்லது சொறியவோ வேண்டாம். அதேபோல அந்த இடத்தில் சோப்பு அல்லது தண்ணீர் போட்டு கழுவ வேண்டாம், ஏனெனில் இது அலர்ஜியை தீவிரப்படுத்தும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்