முறையற்ற மாதவிலக்கை சரி செய்யணுமா? இந்த உணவுகளை எடுத்து கொண்டாலே போதும்!

Report Print Kavitha in ஆரோக்கியம்
352Shares

இன்றைக்கு பல பெண்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்சனைகளுள் ஒழுங்கற்ற மாதவிடாயும் ஒன்றாகும்.

மாதவிலக்கு சீரற்ற முறையில் 25 நாட்களுக்கு ஒருமுறை வந்தாலோ அல்லது கால தாமதமாக வந்தாலோ உங்கள் உடலில் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம் என கூறப்படுகின்றது.

இந்த பிரச்சனை இருந்தால் 1 அல்லது 2 நாட்களே இருக்கும். இந்த முறையற்ற மாதவிடாய்க்கு சீக்கிரத்தில் தீர்வு காணப்பட வேண்டும். இல்லையென்றால் பின்னடைவில் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி விடும்.

அந்தவகையில் தற்போது முறையற்ற மாதவிலக்கை ஒழுங்குபடுத்த சில உணவுகளை சாப்பிட்டாலே போதும். எளிதில் தீர்வு பெற முடியும்.

தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

Google
  • தொடர்ந்து 2 மாதங்களுக்கு அடிக்கடி பப்பாளிக் காயை சமைத்து சாப்பிடுங்கள்.ஏனெனில் பப்பாளிக்காயில் உள்ள சத்துக்கள் கர்ப்பப்பையை சுற்றிலும் உள்ள தசைகளை பலப்படுத்தி, மாதவிலக்கை நெறிப்படுத்துகிறது.
  • புதிய ஆலமர வேரை எடுத்து அதனை ஒரு கப் நீரில் 10 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். அதனை வடிகட்டி அதனுடன் சிறிது பால் கலந்து இரவு தூங்குவதற்கு முன் குடித்தால் முறையற்ற மாதவிலக்கு சீராகும்.
  • ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் சோம்பை போட்டு இரவு முழுவதும் அப்படியே மூடி வைத்திருங்கள். மறு நாள் இந்த நீரை வடிகட்டி குடித்தால் மாதவிலக்கு முறையாகும்.
  • பாவக்காயை பொடியாக நறுக்கி அதனுடன் 1 கிளாஸ் நீரை சேர்த்து அரைத்து வடிகட்டி குடியுங்கள். தினமும் இருதடவை குடித்தால் கர்ப்பப்பையில் உண்டான பிரச்சனைகள் குணப்படுத்தும். கசப்பாக இருந்தாலும் மருந்து என நினைத்து குடியுங்கள்.
  • கற்றாழையிலுள்ள சதைப்பகுதியை எடுத்து அதனுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வாருங்கள். தினமும் சாப்பிட வேண்டும். உங்கள் கருப்பை பிரச்சனைகள் விலகும்.
  • முள்ளங்கியை நருக்கி மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் 1 டம்ளர் மோர் கலந்து அதனை நாள் முழுவதும் அவ்வப்போது குடிக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து குடிக்கலாம். இது நல்ல பலனைத் தரும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்