சர்க்கரை நோயாளிகளே ஒருபோதும் இந்த பழங்களை சாப்பிட்டு விடாதீங்க.. உயிரை பறிக்கும் ஆபத்தை ஏற்படுத்துமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்று பலரையும் ஆட்டிப்படைக்கும் நோயாக நீரிழிவு நோய் உள்ளது.

நீரிழிவு நோயாளிகள் அதனை குறைக்க உணவு கட்டுப்பாடுகள், மருந்துகளை எடுத்து கொள்ளுவது வழக்கம்.

அதிலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிலும் தீங்கு விளைவிக்கும் பழங்களை தவிர்ப்பது நல்லது.

பொதுவாக நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடும்போது கவனமாக தேர்வு செய்ய வேண்டும். பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், சில பழங்கள் நீரிழிவு நோயாளிக்கு தீங்கு விளைவிக்கும்.

குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் பாதுகாப்பாக இருக்க, இரத்த சர்க்கரை அளவை உயர்த்தக்கூடிய சில பழங்களைத் தவிர்க்க வேண்டும்.

அந்தவகையில் தற்போது நீரிழிவு நோயாளிகளில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

niddk.nih.gov
  • மாம்பழத்தில் சர்க்கரை அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை தவிர்க்க வேண்டும். இரத்த சர்க்கரையின் அளவை இது அதிகரிப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
  • சப்போட்டா பழத்தில் அதிக சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் ஆகியவை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு சப்போட்டா பழம் மிகவும் தீங்கு விளைவிக்கும்.
  • திராட்சையில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது. திராட்சைகளை ஒருபோதும் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
  • நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உலர் ஆப்ரிகாட் பழத்தை போன்று பதப்படுத்தப்பட்ட பழங்களை ஒருபோதும் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் ஆப்ரிகாட் பழத்தில் இயற்கையாகவே சர்க்கரையும் உள்ளன.ஆதலால், சர்க்கரை நோயாளிகள் பழங்களை உட்கொள்ளும்போது, கவனமாக இருக்க வேண்டும்.
  • நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய முதன்மை பழங்களில் உலர்ந்த கொடிமுந்தரியும் ஒன்றாகும். இது சர்க்கரை நோயாளிக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
  • நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகையில் அன்னாசிப்பழத்தை சாப்பிடுவது உங்கள் இரத்த சர்க்கரை அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆதலால், அன்னாசிப்பழம் சாப்பிடுவதை கட்டுப்படுத்தவும்.
  • நீரிழிவு நோயாளிக்கு சீத்தாப்பழம் நல்லதல்ல. அதை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • தர்பூசணியில் நார்ச்சத்து மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. இந்த பழத்தை மிகக்குறைவாக உண்ணலாம்.
  • சர்க்கரை நோயாளிகள் பப்பாளி பழத்தை தவிர்க்க வேண்டும். இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிப்பதை தவிர்ப்பதற்கு மிகக் குறைந்த அளவில் பப்பாளி பழம் உண்ணலாம்.
  • நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் பழச்சாறுகளை தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இது குளுக்கோஸ் கூர்முனைகளை ஏற்படுத்தும். இந்த பழச்சாறுகளில் எந்த நார்ச்சத்தும் இல்லாததால், சாறு விரைவாக வளர்சிதை மாற்றப்பட்டு சில நிமிடங்களில் இரத்த சர்க்கரையின் அளவை அதிகமாக்குகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...