ஆஸ்துமா தீவிரமாகாமல் கட்டுக்குள் இருக்க வேண்டுமா? இந்த மூலிகை மட்டும் பயன்படுத்தி பாருங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்
449Shares

ஆஸ்துமா என்பது ஒரு சுவாசக் கோளாறு. இது சுவாச மண்டலத்தின் காற்றுப் பாதைகள் சுருங்குவதால் ஏற்படுகிறது.

ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதிலும் ஏற்படலாம். மாசு, ஒவ்வாமைகள், வைரஸ் தொற்றுகள், குடும்பப் பின்னணி போன்றவைதான் ஆஸ்துமாவுக்கான காரணிகள் ஆகும்.

மூச்சுத் திணறல், நெஞ்சு இறுக்கிப் பிடித்தல், நெஞ்சு வலி போன்ற அறிகுறிகளுடன் தோன்றும்.

இதனை தவிர்க்க என்னத்தான் மாத்திரைகள் இருந்தாலும் நமது முன்னோர்கள் அந்தகாலத்தில் ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்க சில மூலிகைகளை தான் பயன்படுத்தி வந்தனர்.

அந்தவகையில் தற்போது அந்த மூலிகைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • ஆஸ்துமா தீவிரம் கட்டுக்குள் இருக்க தினம் 5 மிளகை மென்று தின்பது நல்லது. வெறும் மிளகு காரமாக இருக்குமே என்பவர்கள் கால் டீஸ்பூன் பச்சரிசி கலந்து இதை சாப்பிடலாம்.

  • ஆஸ்துமாவால் மூச்சுத்திணறல் உள்ளாகும் போது திப்பிலையை வாங்கி நெய் சேர்த்து வறுத்து தூள் செய்து வைத்துகொண்டு ஆஸ்துமா அதிகரிப்பது போல் தலை தூக்குவது போல் தெரிந்தால் கால் டீஸ்பூன் அளவு திப்பிலியை தேனில் குழைத்து சாப்பிட வேண்டும்.

  • துளசி இலைகளை நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேன் அல்லது கருப்பட்டி கலந்து குடிக்கலாம். இவை ஆஸ்துமா உபாதைகளை தலைதூக்காமல் செய்துவிடும்.

  • ஆஸ்துமாவால் இருமல், இளைப்பு பிரச்சனைகள் வரும் போது தூதுவளையை பொடியை தேனில் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா தலைதூக்காது. உடலுக்கு வலு கொடுத்து இளைப்பு, இருமல், சளியை எதிர்கொள்ளும் அளவுக்கு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.

  • கற்பூரவல்லியை ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் எடுத்துகொள்வதன் மூலம் ஆஸ்துமா உபாதைகள் தவிர்க்கப்படும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்