மைதா உணவுகளை அதிகம் சாப்பிட்டால் இந்த பிரச்சினை எல்லாம் ஏற்படுமாம்! உஷாரா இருங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்
280Shares

இப்போதைய காலகட்டத்தில் நிறைய பேர் மைதா மாவில் தயாரித்த உணவுகளே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றார்கள்.

பேக்கரி வகை உணவுகள், பரோட்டா, சமேசா,பிஸ்கட் போன்ற பல உணவுகள் மைதா மாவினை கொண்டு செய்யப்படுகின்றது.

இந்தகாலத்தில் சமைப்பதற்கு நேரமின்றி பலர் கடைகளில் இதுபோன்ற உணவுகளை அன்றாடம் சாப்பிட்டு வருகின்றனர்.

இருப்பினும் மைதா மாவில் செய்யப்படும் உணவுகள் உடலுக்கு நன்மைகளை தராது என்று கூறப்படுகின்றது.

இதில் நார்ச்சத்து இல்லாத காரணத்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

அந்தவகையில் மைதா மா உணவுகளை அடிக்கடி எடுப்பதனால் கிடைக்கும் தீமைகள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

  • மைதா வகை உணவுகளில் அதிக அளவு கிளைசெமிக் இன்டெஸ் கொண்டது. இதனை நீங்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது உங்களின் இரத்த சர்க்கரையின் அளவு மிக வேகமாக அதிகரிக்கும்.
  • மைதா வகை உணவுகளை அதிகம் எடுத்து வந்தால் உங்கள் உடலில் கொழுப்பு அதிகரிக்கும். மேலும் இது உங்களுக்கு உடல் பருமன், இருதய கோளாறு, இரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகளை கொண்டு வரும்.
  • மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால் செரிமான கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படும். ஏனெனில் இதில் ஏராளமான இரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளன.
  • மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால் உங்கள் இரத்த நாளங்களில் அதிக அளவு கொழுப்பு படியும். முக்கியமாக உங்களின் இருதய இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து உங்களுக்கு இருதய கோளாறு, இரத்த குழாய் அடைப்பு, போன்ற பலவித பிரச்சினைகள் ஏற்படும்.
  • மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்தது அல்ல, மைதாவில் நார் சத்து கிடையாது. நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியைக் குறைத்து விடும்.
  • மைதா உணவுகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிடுகிறவர்களுக்கு பெப்டிக் அல்சர், பித்தப்பைக்கல், சிறுநீரக கல் ,இருதய கோளாறு, நீரிழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. நமது உடலில் 150 மில்லிகிராம் அளவுக்கு மேல் கெட்ட கொழுப்பு இருப்பது ஆபத்தானது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்