நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் தொட்டுக்கொள்ள கூட்டு, பொரியல் ஆகியவை செய்வதற்கு ஏற்ற ஒரு காய் வகையாக காலிபிளவர் இருக்கிறது. மிகப் பழங்காலத்திலிருந்து காலிப்ளவர் பல நாடுகளில் உணவாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. காலிபிளவரில் இருக்கும் முழுமையான சத்துக்கள் நமக்குக் கிடைக்க 5 நிமிடத்திற்குமேல் காலிபிளவரை நெருப்பில் வதக்கவோ, வாட்டவே கூடாது என்பது சமையல் வல்லுநர்களின் அறிவுரையாக இருக்கிறது.
காலிஃப்ளவரில் கொழுப்புத் தன்மை கிடையாது. ஆகையால் இந்த மலரான காய் வகையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை சமைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டால், இதன் ஊட்டச்சத்து நீங்கி விடும் என்பதால், இதை ஐந்து நிமிடத்திற்கு மேல் சமைக்க வேண்டாம். சுவை அதிகம் உள்ள காலிஃப்ளவரை பலவிதங்களிலும் சமைக்க முடியும்.
வயதில் மூத்த பெண்கள் முட்டைகோஸ், காலிபிளவர் போன்றவற்றை சாப்பிட்டு வருவதால் பக்கவாதம் நோயில் இருந்து விடுபடுகிறார்கள். தினமும் மூன்று வேளை உணவில் காய்கறிகளை சேர்த்து சாப்பிட்டு வருவதால் ரத்த நாளங்கள் வலுவடைகின்றன. மேலும், கோசுக்கீரை வகைகளை சாப்பிடுவதால் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விடுகின்றன. அமெரிக்காவில் உள்ள இதயத்தை பாதுகாக்கும் அமைப்பின் சார்பில் வெளிவரும் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
காலிபிளவரில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி செரிமான கோளாறுகளை சரி செய்யும்.
புற்றுநோய்
காலிபிளவர் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும் சக்தி உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. காலிஃப்ளவரில் சல்போரபேன் என்ற வேதிப்பொருள் அதிகமாக உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது.
இதய ஆரோக்கியம்
காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும். இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.
செரிமான கோளாறு
செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது. இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் பல்வேறு நன்மைகள் விளையும். காலிபிளவரை பயன்படுத்தி கீழ்வாதம், முடக்குவாதத்தால் ஏற்படும் வலிக்கான மருந்து தயாரிக்கலாம்.
இதயத்தை பலப்படுத்த
விளக்கெண்ணெய்யுடன் காலிபிளவர் இலை பசையை சேர்த்து நன்றாக வதக்கி பத்தாக போட்டு துணிகட்டி வைத்தால் வலி, வீக்கம் சரியாகும். காலிபிளவரை பயன்படுத்தி சிறுநீரகம், இதயத்தை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
நோயெதிர்ப்பு அழற்சி
காலிஃப்ளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், வைட்டமின் கே சத்தும் நிறைந்துள்ளதால், இது உடலில் ஏற்படும் அழற்சியை நீக்குகின்றது. தினமும் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் கீல்வாதம், உடல் பருமன், நீரிழிவு நோய், அல்சரேட்டிவ் கொலிட்ஸ்(ulcerative colitis) மற்றும் குடல் பிரச்சனைகள் போன்ற அழற்சித் தரும் நோய்களை தடுக்க முடியும்.