கல்லீரலை வீட்டில் இருந்தபடியே எளிமையாக சுத்தம் செய்யனுமா? இதை சாப்பிட்டால் போதுமே

Report Print Raju Raju in ஆரோக்கியம்
0Shares

உடல் உறுப்புகளில் முக்கிய உறுப்பாக இருப்பது கல்லீரல்.

ஜீரணம் செய்வது, வளர்சிதை மாற்றத்தை நடத்துவது, நச்சுக்களை வெளியேற்றுவது, ரத்தத்தை வடிகட்டி அனுப்புவது என பல்வேறு வேலைகளை இழுத்து போட்டு கல்லீரல் செய்கிறது.

எனவே கல்லீரலுக்கு மிகவும் உகந்த உணவுகளை சாப்பிடுவது முக்கியம். அது தவிர்த்து நீங்கள் நச்சுக்களை வெளியேற்ற உதவும் வகையில் உணவுகளை சாப்பிடுவதால் கல்லீரலுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அதன் வேலைகளை எளிமைப்படுத்துவதாகவும் அமையும்.அதன் கொழுப்பையும் அகற்றும்.

அவ்வாறு எளிமையான முறையில் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை சுத்தம் செய்யும் முறை குறித்து காண்போம்.

புதினா ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்,

எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்,

தேன் – 1 டேபிள் ஸ்பூன்

ஒரு கப் நிறைய வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, புதினா சாறு மற்றும் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். இந்த மூன்றுமே நச்சுக்களை சிறு நீரகத்திற்கு அடித்துக் சென்று விடும்.

கல்லீரலில் உண்டாகும் பாதிப்பை சரிப்படுத்தும். வீக்கங்களை குறைக்கும். வாரம் இரு நாட்கள் இப்படி குடித்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்