காய்கறிகள் நறுக்க பலகையை பயன்படுத்துறீங்களா? இந்த விஷயத்துல கவனமா இருங்க!

Report Print Printha in வீடு - தோட்டம்
541Shares

நாம் அன்றாடம் பலகையில் வைத்து காய்கறிகளை நறுக்கும் போது, ஒருசில விஷயங்களை கட்டாயம் கவனிக்க வேண்டும்.

  • இறைச்சி மற்றும் காய்கறிகளை நறுக்குவதற்கு, ஒரே பலகையை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இறைச்சியிலிருந்து உருவாகும் சால்மோனெல்லா, ஈகோலை போன்ற நுண்கிருமிகள் பலகையிலேயே தங்கிவிட அதிக வாய்ப்புள்ளது. இதனால் தொற்று நோய்கள், மற்றும் வயிற்று உபாதைகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
  • காய்கறி நறுக்குவதற்கு, மரப்பலகையை பயன்படுத்தி விட்டு, கழுவாமல் வைக்காமல், அதை உடனடியாக சமையல் சோடாவை பயன்படுத்தி, கழுவி வெயிலில் காய வைக்க வேண்டும். இதனால் அந்த பலகையில் இருந்து நாற்றம் ஏற்படாமல் சுத்தமாக இருக்கும்.
  • காய்கறி பலகையை கழுவியதும் நன்றாக உலர வைக்காமல் இருந்தால் அதில் கிருமிகள் தங்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே அதை நன்றாக கழுவியதும், உலர வைத்த பின்பே மீண்டும் பயன்படுத்த வேண்டும். இதனால் அதில் கிருமித் தொற்றுக்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது.
  • நாம் காய்கரிகளை நறுக்கும் போது, பலகையில் வெட்டுக்கள் ஏற்பட்டு, அதில் அழுக்குகள் மற்றும் கிருமிகள் இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே பலகையில் வெட்டுக்கள் விழாமல் தடுப்பதற்கு, பலகையில் எண்ணெய் தடவி, சில நிமிடங்களுக்குப் பின் உலர்ந்ததும் நறுக்க வேண்டும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments