வாஸ்துப்படி கன்னி மூலையில் இவை எல்லாம் இருக்க கூடாதாம்

Report Print Kavitha in வீடு - தோட்டம்

தென்மேற்கு என்பது கன்னி மூலை என அழைக்கப்படுகின்றது. இங்கு சப்த கன்னிகள் வாசம் செய்கிறார்கள் என்று சொல்லப்படுகின்றது.

வீட்டின் கன்னி மூலை எப்போதும் அடைத்து வைத்திருப்பது நல்லது இல்லாவிடின் துன்பங்கள் நம்மை வந்து சேர்ந்துவிடுமாம். அந்தவகையில் வாஸ்துப்படி கன்னி மூலையில் என்னவெல்லாம் தவிர்க்கலாம் என்பதை பார்க்கலாம்.

  • கன்னி மூலையில் படுக்கை அறை அமைத்து கட்டிலுக்கு அடியில் பழைய சாமான்கள் வைப்பது கூடாது. அது உடல் ஆரோக்கியத்தை மேலும் கெடுத்துவிடுமாம்.
  • மேற்கு மற்றும் தெற்கு தலை வைத்துப் படுப்பது நல்லது. தலைக்கு அடியில் தங்கம், பணம், பத்திரம் போன்றவற்றை வைத்து படுக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் சீக்கிரமே பொருள் நம் கையை விட்டுப் போய் விட வாய்ப்புள்ளது.
  • படுக்கையின் மேல் விரிக்கும் விரிப்பான் கருப்பு வண்ணம் இருந்தால் காலை எழுந்திருக்கும் போது ஒருவித அலுப்பு மற்றும் சோம்பேறித்தனம் ஏற்படும். அதற்கு மாறாக மஞ்சள், பச்சை, வெள்ளை இருந்தால் புத்துணர்ச்சி ஏற்படும்.
  • கன்னி மூலையில் உள்ள பெட்ரூமில் கண்ணாடி முன்பு தலைவாரினால் பொருள் விரயமாக வாய்ப்புள்ளது.
  • கன்னி மூலையில் பெட்ரூம் அமைத்து அங்கேயே பூஜை அறையும் அமைத்துக் கொள்வது மிகவும் தவறு.
  • கன்னி மூலையில் செப்டிப் டாங்க், டாய்லெட், பாத்ரூம், தலைவாசல் போன்றவை இருந்தால் பாதிப்பு கட்டடத்திற்கு அல்ல. நம் வீட்டில் உள்ளவர்களுக்குத் தான் உடல்நிலை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, மனக்குழப்பம், நிம்மதியின்மை, டென்ஷன், ரத்த அழுத்தம் போன்றவை அதிகமாக ஏற்படும். உடல் உபாதைகள் உடல் சோர்வு ஏற்படும். திருமண வாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்படும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்