திருச்சியில் அரசு பேருந்தில் தீ விபத்து: போக்குவரத்து நெரிசலால் அவதி

Report Print Arbin Arbin in இந்தியா

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப்பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மாயாஸ் அருகே நின்று கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் இரண்டு வாகனங்களில் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் அந்த பேருந்து முழுவதுமாக எரிந்தது சேதமடைந்தது. விபத்துக்கான காரணம் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

அரசுப்பேருந்து தீ விபத்தை அடுத்து திருச்சி மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. புறவழிச்சாலை, ஸ்ரீரங்கம், பாலக்கரையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments