உயிருக்கு போராடிய பெண்! கோவாவில் அவசரமாக தரையிறங்கிய ஓமான் ஏர் விமானம்

Report Print Jubilee Jubilee in இந்தியா

மஸ்கட்டில் இருந்து சென்னை வர வேண்டிய ஓமான் ஏர் விமானம் கோவாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அதில் இருந்த பெண் பயணிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து விமானம் அவசரமாக கோவாவில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கட்டில் இருந்து ஓமான் ஏர் விமானம் சென்னை வந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த பெண்ணுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து இன்று காலை 7 மணியளவில், அந்த விமானம் கோவாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அந்த பெண்மணியை மருத்துவமனைக்கு அனுப்பிய பிறகு விமானம் திட்டமிட்டபடி கோவாவில் இருந்து புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தது.

இருப்பினும் அப்பெண்மணி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

அவரது உடல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மரணம் அடைந்த பெண்ணின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments