அமைச்சரின் செருப்பை மாட்டிவிட்ட காவலர்: வீடியோவால் வெடித்த சர்ச்சை

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஒடிசா மாநிலத்தில் அமைச்சரின் செருப்பை காவலர் ஒருவர் மாட்டிவிட்ட சம்பவம் தொடர்பான புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கெயோஞ்ஜர் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற 70வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஒடிசா மாநில சிறு, குறுந்தொழில் துறை அமைச்சர் ஜோகேந்திர பெஹெரா கலந்துகொண்டார்.

சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடியை அமைச்சர் ஏற்றியுள்ளார், தேசியக்கொடி பறக்கதொடங்கியதும் அமைச்சர் கழற்றி வைத்திருந்த அவரது செருப்பை தனிப்பட்ட பாதுகாவலர் அமைச்சரின் காலில் மாட்டிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் உள்ளூர் ஊடகங்களில் ஒளிபரப்பட்டதையடுத்து, பல்வேறு கண்டங்கள் குவிந்துள்ளது, மேலும் மந்திரியின் இந்த செயல் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி தொடர்வதையே காட்டுகிறது என்றும் அமைச்சரின் செயலுக்கு முதல் மந்திரி நவீன் பட்நாயக் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மந்திரி ஜோகேந்திரா கூறியதாவது, ‘‘நான் மிக முக்கிய பிரமுகர். நான் தான் கொடியை ஏற்றினேன், அவர் இல்லை" என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments