இணையத்தை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்ட மாணவன்: வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Report Print Santhan in இந்தியா

ஹைதரபாத்தில் பொறியில் மாணவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், எப்படி தற்கொலை செய்யலாம் என்று பத்து குறிப்புகள் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தில் நவீன்குமார் என்ற 24 வயது பொறியியல் மாணவன் கடந்த புதன் கிழமை அனுபாமா பகுதியில் உள்ள ஆண்கள் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

இதை விசாரித்த அப்பகுதி பொலிசார் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட நவீன்குமார் எழுதிய கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளது. அதில் அவர் தமது குடும்ப பிரச்னைகள் காரணமாகத்தான், தான் தற்கொலை முடிவை எடுத்துள்ளேன் என எழுதியுள்ளார்.

அது மட்டுமின்றி அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் இணையத்தை பயன்படுத்தி எவ்வாறு எல்லாம் தற்கொலை செய்து கொள்ளலாம் என பல்வேறு வீடியோக்களை பார்த்துள்ளார்.

அதில் அவர் முக்கியமாக 10 குறிப்புகளை எடுத்துள்ளார். குறிப்பாக காத்தாடியில் கயிறு கட்டி தற்கொலை செய்துகொள்வது, தொண்டை இறுக்கி தற்கொலை செய்து கொள்வது என பார்த்துள்ளார் என பொலிசார் கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

நவீன்குமார் சொந்த ஊர் நால்கோண்டா மாவட்டத்தில் அமைந்துள்ள, மோட்குர் கிராமம் என்பதும், கடந்த பிப்ரவரி மாதம் தான் அனுபாமா பகுதியில் உள்ள ஆண்கள் விடுதியில் தங்கி படித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments