மீண்டும் லண்டன் மருத்துவர்! முதல்வரின் நிலை என்ன?

Report Print Raju Raju in இந்தியா

ஜெயலலிதாவுக்கு மீண்டும் சிகிச்சையளிக்க லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் எந்நேரமும் சென்னைக்கு வரலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நல கோளாறு காரணமாக கடந்த 22 ஆம் திகதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து மருத்துவர் ரிச்சர்ட் சில நாட்களுக்கு முன்னர் சென்னை வந்தார். சிகிச்சை அளித்து விட்டு அவசர பணி காரணமாக லண்டனுக்கு சென்று விட்டார்.

அந்த பணிகளை முடித்து விட்டு திரும்ப சென்னை வருமாறு அப்பலோ மருத்துவர்களின் அவருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து மருத்துவர் ரிச்சர்ட் எந்த நேரமும் சென்னைக்கு வரலாம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments