ஜெயலலிதாவுக்கு பலன் அளிக்கும் பிசியோதெரபி சிகிச்சை

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றனர்.

புறப்படும் முன்பு, இங்குள்ள மருத்துவர்கள் குழுவிடம், ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சைகளை தொடர வேண்டும் என்பது குறித்தும் பட்டியலிட்டு கொடுத்துள்ளனர். அதன்படி, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள சீமா, மேரி ஆகிய 2 பெண் பிசியோதெரபி நிபுணர்களும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சிகிச்சையும் அவருக்கு நல்ல பலனளித்து வருகிறது.

அதே நேரத்தில், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்களும் டெலிபோன், இ-மெயில், வீடியோ கான்பரன்சிங் மூலம் ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவும் இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் சென்னை வந்து சிகிச்சை அளிக்க இருக்கிறார். இதனால், விரைவில் ஜெயலலிதா வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சிங்கப்பூர் பெண் நிபுணர்கள் அளித்து வரும் ‘பிசியோதெரபி’ சிகிச்சை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நல்ல பலன் அளித்து வருகிறது. விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments