இன்னும் சில தினங்களில் ஜெயலலிதா தனி வார்டுக்கு மாற்றம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதால் இன்னும் சில தினங்களில் தனி வார்டுக்கு மாற்றம் செய்ய இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி முதல் தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு லண்டன் மருத்துவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் என பல்வேறு மருத்துவர்கள் அளித்த தொடர் சிகிச்சையால் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

முழுவதும் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்ட முதல்வருக்கு தற்போது இரவு நேரங்களில் மட்டுமே தரப்படுகிறது.

மற்ற நேரங்களில் அவர் இயற்கையாகவே சுவாசிக்கிறார் என சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியானது.

இப்படி அவர் உடல்நிலை நன்றாக தேறி வருவதால் இன்னும் சில தினங்களில் அவர் தனி வார்டுக்கு மாற்றப்படுவார் என அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments